தமிழ்நாடு

tamil nadu

லோகாண்டோ மூலம் பேராசிரியரிடம் ரூ.7.70 லட்சம் மோசடி..! பெங்களூரில் பிடிபட்ட மோசடி கும்பல்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 1:14 PM IST

Locanto app scam: கோவையில் லோகாண்டோ செயலி மூலம் பேராசிரியரிடம் இருந்து ரூ.7.70 லட்சம் மோசடி செய்த 9 பேர் கொண்ட கும்பலை பெங்களூரில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மசாஜ் ஆசையில் விழுந்த பேராசிரியரிடம் 7.70 லட்சம் மோசடி
கோவை மசாஜ் ஆசையில் விழுந்த பேராசிரியரிடம் 7.70 லட்சம் மோசடி

கோயம்புத்தூர்: பீளமேடு பகுதியைச் சேர்ந்த 43 வயதான கல்லூரி பேராசிரியர் ஒருவர், கடந்த மாதம் லோகாண்டோ எனும் டேட்டிங் இணையதளத்தில், கால் கேர்ள்ஸ் சர்வீஸ் மற்றும் மசாஜ் சர்வீஸ் போன்றவற்றைத் தேடி, அதற்காக அந்த இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, மறுபுறம் பேசிய அடையாளம் தெரியாத கும்பல், பெண்களை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியது மட்டுமல்லாமல், பெண்களின் பாதுகாப்பு முக்கியம் எனக் கூறி, அந்த பேராசிரிடம் முன்பணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளனர். பின்னர் பல இளம் பெண்களின் புகைப்படங்களையும் பேராசிரியருக்கு அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து பல தவணையான பேராசிரியரிடம் இருந்து, மொத்தம் 7.70 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர். பணத்தை செலுத்திய பின்பு அந்த செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளது. அதன்பின் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பேராசிரியர், இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

பின்னர், அது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், லோகாண்டோ இணையதளத்தின் "URL" மற்றும் பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் எண்கள் ஆகியவற்றை போலீசார் கைபற்றி தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பேராசிரியரிடம் மோசடி செய்தவர்கள்

சைபர் கிரைம் காவல் துறையினரின் சோதனையில், மோசடி செய்தவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்பவரின் தலைமையில் செயல்படும் 9 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது. மேலும், மோசடி கும்பலின் தலைவர் ஹரி பிரசாத், விரைவில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, இத்தகைய மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும், அந்த பண மோசடி கும்பல், லோகாண்டோ இணையதளத்தில் ஆயுர்வேத மசாஜ் மற்றும் கால் கேர்ள் சர்வீஸ் தமிழகம் முழுவதும் செய்யப்படும் என விளம்பரம் செய்ததுடன், போலீசாரிடம் சிக்காமல் இருக்க மும்பை, கோவா, ஹைதராபாத், பெங்களூரு என பல்வேறு இடங்களுக்கு தங்களது இருப்பிடங்களை மாற்றி வந்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில், அந்த மர்ம கும்பல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்துக் கொண்டு, இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெங்களூருக்கு விரைந்த சைபர் கிரைம் காவல் துறையினர், மோசடியில் ஈடுபட்ட ஒன்பது பேரையும் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் பொள்ளாச்சி அருகே மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த எம்.ஹரி பிரசாத், வி.மகேந்திரன், சக்திவேல், சரவணமூர்த்தி, அருண்குமார், எம்.சக்திவேல், ஜெயபாரதி, கே.மகேந்திரன், கோகுல் என்பது தெரிய வந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும், நீதிபதி முன் அஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மிரட்ட போகுதா மிக்ஜாம் புயல்..! வானிலை மையம் தெரிவிப்பது என்ன..?

ABOUT THE AUTHOR

...view details