ETV Bharat / state

சென்னைக்கு தென் கிழக்கே புயல் சின்னம்.. வானிலை மையம் தெரிவிப்பது என்ன..?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 10:04 AM IST

Updated : Dec 1, 2023, 5:12 PM IST

Bay of Bengal Cyclone: சென்னைக்கு தென்கிழக்கே 800 கி.மீ தொலைவில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Meteorological Department announced Mikjam Cyclone likely to make landfall between Chennai and Machilipatnam
மிச்சாங் புயல்

சென்னை: வங்கக் கடலில் கடந்த 27ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 790 கி.மீ தூரத்திலும், சென்னைக்கு தென்கிழக்கே 800 கி.மீ, பாபட்லாவிலிருந்து தென்கிழக்கே 990 கி.மீ., மச்சிலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கி.மீ. நிலைக் கொண்டிருக்கிறது நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது புயலாக மாறும் பட்சத்தில் டிசம்பர் 4ஆம் தேதி சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், புயலுக்கு முன் அமைதி என்பது போல் இன்று மற்றும் நாளை காலை வரை மழை சற்று குறைவாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: வங்கக்கடலில் உருவாகும் புயல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Last Updated : Dec 1, 2023, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.