ETV Bharat / business

சென்னையில் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 குறைவு.. ஏறிய வேகத்தில் இறங்கும் விலை! - Today Gold and Silver rate

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 12:01 PM IST

Today Gold and Silver rate: தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தில் விலை இன்று (மே 23) சவரனுக்கு ரூ.880 குறைந்து, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் (கோப்புப்படம்)
தங்கம் (கோப்புப்படம்) (Credits: ETV Bharat Tamil Nadu)

சென்னை: நாளுக்கு நாள் ஏற்றத்தைக் காணும் தங்கத்தின் விலை, அவ்வப்போது சிறிதளவில் விலைக் குறைந்தும் வருகிறது. தங்கம் என்பது ஆடம்பர ஆபரணமாக மட்டுமில்லாமல், இந்திய மக்களின் சேமிப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், தற்போதைய தங்கத்தின் விலை ஏற்றத்தால் சாமானிய மக்களுக்கு அது எட்டாக்கனியாக மாறி வருகிறது.

தங்கத்தின் விலையானது, சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக உயர்வைக் கண்டு வந்த தங்கத்தின் விலை மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அந்த வகையில், இன்று (மே 23) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு ரூ.110 குறைந்து, ரூ.6 ஆயிரத்து 750க்கும், ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி நேற்றைய விலையில் ரூ.3.30 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.97க்கு விற்பனை. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.97 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (மே 23):

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,750
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.54,000
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.7,364
  • 1 சவரன் தங்கம் (24-கேரட்) - ரூ.58,912
  • 1 கிராம் வெள்ளி - ரூ.97
  • 1 கிலோ வெள்ளி - ரூ.97,000

இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.