ETV Bharat / state

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

author img

By

Published : Feb 1, 2020, 1:59 PM IST

rti officers meeting at Salem collectorate
rti officers meeting at Salem collectorate

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாநில தகவல் ஆணையர்கள், வழக்குரைஞர்கள் எஸ். முத்துராஜ், தமிழ்குமார் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் ஆணையத்தின் மூலம் தகவல் பெற விரும்பி விண்ணப்பித்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையின்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், பிற அரசு பொதுத் துறை அலுவலகர்கள் கலந்துகொண்டனர்.

பெரியார் பல்கலைக்கழகம் தொடர்பான ஆறு மனுக்கள், பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக 16 மனுக்கள், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை தொடர்பான 15 மனுக்கள், குடிநீர் வடிகால் வாரியம் தொடர்பான ஒரு மனு, நகராட்சி நிர்வாகம் தொடர்பான 15 மனுக்கள், பேரூராட்சிகள் துறை தொடர்பான 30 மனுக்கள் என மொத்தம் 83 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன்கீழ் தகவல் கோரும் மனுதாரர்கள் கேட்கும் தகவல்களை உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாத பொதுத் தகவல் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் மீது தகவல் அறியும் உரிமை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க :தண்ணீர் கேட்பதுபோல் நடித்து செயின் பறிப்பு: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

Intro:தகவல் வழங்காத பொது தகவல் அலுவலர்கள்,
மேல்முறையீட்டு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தகவல் ஆணையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.Body: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் தகவல் பெறும் உரிமைச்சட்ட மனுக்கள் மீதான விசாரணை முகாம் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.


மாநில தகவல் ஆணையர்கள் வழக்குரைஞர் எஸ்.முத்துராஜ் மற்றும் வழக்குரைஞர் எஸ்.டி.தமிழ்குமார் ஆகியோர் தலைமையில், தகவல் ஆணையத்தின் மூலம் தகவல் பெற விரும்பி விண்ணப்பித்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


விசாரணையின் போது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் பிற அரசுத்துறை பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் பல்கலைக்கழகம் தொடர்பான 6 மனுக்கள், பள்ளி கல்வித்துறை தொடர்பாக 16 மனுக்கள், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை தொடர்பான 15 மனுக்கள், குடிநீர் வடிகால் வாரியம் தொடர்பான 1 மனு, நகராட்சி நிர்வாகம் தொடர்பான 15 மனுக்கள் மற்றும் பேரூராட்சிகள் துறை தொடர்பான 30 மனுக்கள் என மொத்தம் 83 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


அதைத்தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அனைத்து பொதுத்தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் தகவல் கோரும் மனுதாரர்களுக்கு கோரும் தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன்படி உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும்.



Conclusion:அவ்வாறு வழங்கப்படாத பொதுத்தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் மீது தகவல் அறியும் உரிமை சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தகவல் ஆணையர்கள் வழக்குரைஞர் எஸ்.முத்துராஜ், வழக்குரைஞர் எஸ்.டி.தமிழ்குமார் ஆகியோர் வலியுறுத்தினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.