ETV Bharat / sports

ரியான் பராக் அதிரடி ஆட்டம்.. பஞ்சாப் அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்கு! - RR Vs PBKS

author img

By PTI

Published : May 15, 2024, 9:44 PM IST

PBKS Vs RR: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 145 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் புகைப்படம்
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் புகைப்படம் (credits IANS)

கவுகாத்தி: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே 15) ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கவுகாத்தியில் வைத்து நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக, டாம் கோஹ்லர் - ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்க, முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் களம் கண்டார். பவர் பிளே முடிவில் 38-1 என்ற கணக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது.

7வது ஓவர் தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் நாதன் எலிஸ் வீசிய பந்தை ராகுல் சாஹரிடம் கொடுத்து அவுட் ஆக, ரியான் பராக் களம் கண்டார். ஏற்கனவே களத்தில் இருந்த கோஹ்லர் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் களம் கண்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து திணறியது. 10 ஓவர் முடிவிற்கு 68-3 என்ற கணக்கில் விளையாடியது. பராக் - அஸ்வின் காம்போ சிறப்பாக விளையாட, அஸ்வின் வெறும் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர் வந்த வேகத்தில் துருவ் ஜூரல், பொவல் ஆகிய இருவரும் பெரிதாக ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்ப, டோனோவன் ஃபெரேரா சொற்ப ரன்னில் வெளியேற, டிரெண்ட் போல்ட் களம் கண்டார். 18 ஓவர் முடிவிற்கு 130-7 என்ற கணக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. ரியான் பராக் அரை சதம் விளாசுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்கள் எடுத்து அவுட் ஆக, ஆவேஷ் கான் களம் கண்டார். 20 ஓவர் முடிவிற்கு ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களைக் குவித்தது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 48 ரன்களும், அஷ்வின் 28 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாம் கரன், ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல் ஆகிய 3 பேரும் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், நாதன் எலிஸ் தலா 1 விக்கெட்டுடையும் வீழ்த்தி அசத்தினர்.

இதையும் படிங்க: டாஸ் வென்று ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு! ஆறுதல் வெற்றி பெறுமா பஞ்சாப்? - IPL2024 PBKS Vs RR Match Highlights

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.