ETV Bharat / bharat

டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! தொடரும் மர்ம நபர்களின் அட்டகாசம்! - Kanpur Bomb threat

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 7:07 PM IST

டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Representative Image (ANI Photo)

கான்பூர்: கடந்த சில நாட்களாக டெல்லி, குஜராத், ராஜஸ்தான் ஆகிய வட மாநிலங்களில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு மின்னசல் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்துவது வாடிக்கையாகி வருகிறது.

இருப்பினும் சோதனையின் முடிவில் அது போலி மிரட்டல் மட்டுமே என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் ரஷ்ய ஐ.பி. முகவரியிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்படுவது தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்தும், அவர்கள் ஏன் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள 10 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர்.

இருப்பினும் மிரட்டல் போலி என்பது தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கும் இந்த சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திடீர் வெடிகுண்டு மிரட்டலால் உத்தர பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 1ஆம் தேதி முதல் இதுவரை ஏறத்தாழ 130 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை - மத்திய உள்துறை அமைச்சகம்! - CAA Citizenship Certificates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.