தமிழ்நாடு

tamil nadu

தடுப்பூசி போடலைனா ரூ.15 ஆயிரம் சம்பளத்துல பிடிப்பு - அமெரிக்க ஏர்லைன்ஸ் அதிரடி

By

Published : Aug 27, 2021, 6:09 PM IST

Updated : Aug 27, 2021, 7:19 PM IST

தடுப்பூசி போடலைனா ரூ.15 ஆயிரம் சம்பளத்துல பிடிப்பு
தடுப்பூசி போடலைனா ரூ.15 ஆயிரம் சம்பளத்துல பிடிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்று, கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத தங்கள் ஊழியர்களின் ஊதியத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத தங்கள் ஊழியர்களின் ஊதியத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் காப்பீட்டுத்திட்டத்திற்காக பிடித்தம் செய்வோம் எனக் கூறியுள்ளது.

கரோனா தடுப்பூசி போடத் தவறினால் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவன சுகாதாரத் திட்டத்தின்கீழ், ஊழியர்களின் மாத சம்பளத்தில் 200 டாலர்கள் அதாவது ரூ.15 ஆயிரம் எடுப்பார்கள் என விமான நிறுவன உயர் அலுவலர் தெரிவித்துள்ளார்.

டெல்டா ஏர்லைன்ஸின் அதிரடி யோசனை

இத்தொகை அந்நிறுவன ஊழியர்களின் பெயரில் காப்பீடு செய்யப்படும். ஏனெனில், ஒருவேளை விமான ஊழியர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டால், அவர்கள் சரியாக இந்திய மதிப்பில் 38 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய நேரும் என்பதால், இந்த திட்டத்தை டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தடுப்பூசிகள் டெல்டா வைரஸை எவ்வாறு எதிர்கொள்கின்றன?

Last Updated :Aug 27, 2021, 7:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details