ETV Bharat / state

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு லாரி மூலம் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 5:36 PM IST

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு லாரி மூலம் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு லாரி மூலம் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்

Relief materials for Chennai: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு நிவாரண பொருட்களை மக்களிடம் இருந்து சேகரித்து அனுப்பி வைத்தார்.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு லாரி மூலம் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்

தூத்துக்குடி: மக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தார். வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் கடந்த டிச.4 ஆம் ஆந்திர மாநிலம் நெல்லூர் மச்சிலிப்பட்டணம் இடையே கரையை கடந்தது. இந்த புயலால் தற்போது சென்னை மாநகரம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.

பல பகுதிகளில் கீழ் தளத்தில் வசித்து வந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. அடுக்குமாடிகளில் குடியிருக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழை நின்று 3 நாட்கள் ஆன நிலையில் தற்போது வரை பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி காணப்படுகிறது. இதனால் மக்கள் தண்ணீர், உணவு பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து அரசாங்கமும், பல்வேறு அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர், பிஸ்கட், போர்வை போன்ற நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: டிச.9-இல் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி நிவாரண பொருட்கள் வழங்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிவாரண பொருட்களை இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லாரி மூலம் அனுப்பி வைத்தார்.

சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான 15,000 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 1,380 கிலோ அரிசி, 40 கிலோ பருப்பு, போர்வை, ப்ரெட், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் லாரிகள் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிவாரண பொருட்கள் அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “ சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த நிவாரண பொருட்கள் அனுப்பப்படும்” என கூறினார்.

இதையும் படிங்க: மூன்றாவது நாளாக தொடரும் மீட்புப் பணிகள்.. களம் இறங்கிய தனியார் ஸ்கூபா வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.