ETV Bharat / state

‘விவசாயத்திற்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்தமாட்டேன் என முதலமைச்சர் உறுதியளிக்கணும்!’

author img

By

Published : Jan 20, 2020, 6:17 PM IST

செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன்
செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன்

திருவாரூர்: விவசாயத்திற்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்தமாட்டேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.


திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், “மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு விரோதமாக விவசாயிகளை ஒடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறது. அதில், குறிப்பாக ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கும் அது குறித்து ஆய்வுசெய்வதற்கும் இனி விவசாயிகளிடம் கருத்தை கேட்க வேண்டியதில்லை.

பொதுமக்கள் கருத்தை கேட்க வேண்டியதில்லை, மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிபெற தேவையில்லை என்கிற ஒரு அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிரப்பித்திருப்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது.

இந்தச் சட்டம் கூட்டாட்சி தத்துவத்தை ஒழிக்ககூடிய வகையிலும் மக்கள் கருத்து சுதந்திரத்தை பறிக்ககூடிய வகையிலும் உள்ளது. மேலும், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் இந்தச் சட்டத்திற்கு எதிராக விரைந்து வழக்கு தொடங்கவிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர். பாண்டியன்

மேலும், “மாநில அரசின் கூட்டாட்சி தத்துவத்தை முற்றிலும் ஒழிக்கக்கூடிய வகையிலுள்ள இந்தச் சட்டதை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு அமைச்சரவை கூட்டத்தில் சட்டம் இயற்றி மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, விவசாயிகளுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் தனது உயிர் உள்ளவரை தமிழ்நாட்டில் அனுமதிக்கமாட்டேன் என்று சபதம் ஏற்று அதை நிறைவேற்றியும் காட்டினார்.

அவர் வழியைப் பின்பற்றும் அதிமுக அரசும் விவசாயத்திற்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்தமாட்டோம் என உறுதியளித்து அவசர சட்டத்திற்கு எதிரான சட்டத்தை இயற்றி அதனை நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும் - பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை!

Intro:Body:
உயிர் உள்ளவரை விவசாயிகளுக்கு எதிராக செயல்படமாட்டேன் என்ற சபதத்தோடு எவ்வாறு ஜெயலலிதா இருந்தாரோ அதேபோன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விவசாயிக்கு எதிரான திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என உறுதியுடன் இருக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு தமிழகத்திற்கு விரோதமாக விவசாயிகளை ஒடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கும் அதுகுறித்து ஆய்வு செய்வதற்கும் இனி விவசாயிகளிடம் கருத்தை கேட்க வேண்டியதில்லை, பொதுமக்கள் கருத்தை கேட்க வேண்டியதில்லை, மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற தேவையில்லை என்கிற ஒரு அவசர சட்டத்தை மத்திய அரசு பிரப்பித்திருப்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது.

கூட்டாட்சி தத்துவத்தை ஒழிக்ககூடிய வகையிலும் மக்கள் கருத்து சுதந்திரத்தை பறிக்ககூடிய வகையிலும் உள்ளது.மேலும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக விரைந்து வழக்கு தொடங்க இருக்கிறது என கூறினார்.

மாநில அரசின் கூட்டாட்சி தத்துவத்தை முற்றிலும் ஒழிக்கக்கூடிய இச்சட்டதை ஏற்கமாட்டோம் என்று தமிழக அரசு அமைச்சரவை உடனடியாக கூட்டி அவசர சட்டம் இயற்றி மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்தையும் உயிர் உள்ளவரை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டேன் என்று சபதம் ஏற்று அதை நிறைவேற்றி காட்டினார். அவர் வழியை பின்பற்றும் இந்த அரசு அவசரத்துக்கு எதிராக சட்டத்தை இயற்றி நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.