ETV Bharat / state

'விளைநிலங்களை அழித்தால் ஆடு மாடுகளை போல் இலை தழைகளை உண்ணும் நிலை ஏற்படும்' - விவசாயிகள் நூதன போராட்டம்!

author img

By

Published : Jul 31, 2023, 11:04 PM IST

விளைநிலங்களை அழித்தால் மனிதர்கள் ஆடு மாடுகள் போல் தழைகளை உண்ணும் நிலை ஏற்படும் - நூதன போராட்டம்
விளைநிலங்களை அழித்தால் மனிதர்கள் ஆடு மாடுகள் போல் தழைகளை உண்ணும் நிலை ஏற்படும் - நூதன போராட்டம்

மின்சாரத்துக்காக விளை நிலங்களை அழித்தால் எதிர்காலத்தில் மனிதர்கள் ஆடு மாடுகளைப் போல் இலை தழைகளை உண்ணும் நிலை ஏற்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளைநிலங்களை அழித்தால் மனிதர்கள் ஆடு மாடுகள் போல் தழைகளை உண்ணும் நிலை ஏற்படும் - நூதன போராட்டம்

திருவண்ணாமலை: நெய்வேலியில் நிலக்கரி எடுப்பதற்காக 16 ஆண்டுகளுக்கு முன் சுமார் 18ஆயிரம் ஏக்கர் விலை நிலங்கள் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டன. தற்போது 16 ஆண்டு காலமாகியும் என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தப்பட்ட அந்த நிலங்களை நிலக்கரி எடுக்க பயன்படுத்தாமல் காலதாமதம் செய்து வந்தது. இந்த நிலையில் சில வாரங்களாக அந்த நிர்வாகம் சுரங்கம் அமைப்பதற்காக அந்த நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை அழித்து நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த செயலை கண்டிக்கும் விதமாக கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் சார்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆடு மாடுகள் போல் இலை தழைகளை உண்டு தங்கள் எதிர்ப்பை காட்டினர். தற்போது உணவு தட்டுப்பாடு இருந்துவரும் நிலையில் விலை நிலங்களை இப்படி அளித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும், விலை நிலங்களை அளித்துவிட்டு என்எல்சி நிறுவனம் எதை சாப்பிடப்போகிறது என கேள்வி எழுப்பிய விவசாயிகள் இது போல இலை தலைகளை தான் அவர்கள் சாப்பிட வேண்டும் என காட்டமாக கூறினர்.

புவி வெப்பமயமாதல் காரணமாக மாற்று எரிசக்தி மின் உற்பத்தியில் காற்றாலை, சூரிய மின்சக்தி, நீர்மின் சக்தி, பையோ கழிவு ஆற்றல் மின் சக்தி, கடல் அலை விசை மூலம் மின்சக்தி உள்ளிட்ட பல வகையில் தற்போது மின்சாரம் தயாரிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அனல் மின்சக்தி மூலம் சுமார் இரண்டு விழுக்காடு அளவுக்கு மட்டுமே மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

இதற்காக மனிதனின் உணவு தேவைக்கு அடிப்படையாக விளங்கும் விவசாய விளை நிலங்களை அழித்து மின் உற்பத்தி மேற்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகளை என்எல்சி நிர்வாகம் கைவிடவேண்டும் எனவும், இந்த நிலை நீடித்தால் மனிதன் ஆடு, மாடுகளைப் போல இலைகளை உண்ணும் நிலை ஏற்படும் என்பதை விளக்கும் விதமாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் நடத்தினர்.

அரசின் சார்பில் ஒரு நிலம் கொடுக்கப்பட்டால் 5 வருடங்களுக்குள் அந்த நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்பது பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் 2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிலத்தை இதுவரை 16 ஆண்டுகள் பயன்பாடுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. எனவே இந்த நிலங்களை நில உரிமையாளர்களிடமே என்எல்சி நிர்வாகம் திரும்பி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் சார்பில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் நாளை முதல் 500 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை - அமைச்சர் பெரியகருப்பன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.