ETV Bharat / state

நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அன்பில் மகேஷ்

author img

By

Published : Nov 29, 2021, 12:16 PM IST

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ஏழாயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளதால், நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் வைத்த கோரிக்கை, முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்: தொடர் கனமழையினால் தஞ்சை மாவட்டத்தில் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கரம்பயம், காட்டுக்கோட்டை, திருப்பந்துருத்தி ஆகிய பாதிக்கப்பட்ட பகுதிகளை அன்பில் மகேஷ் ஆய்வுசெய்தார். மேலும் அங்கு பயிரிடப்பட்டு வெள்ளத்தால் சேதமடைந்த சம்பா, தாளடி பயிர்களைப் பார்வையிட்டு விவசாயிகளிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

இதையடுத்து பேசிய விவசாயிகள், "தஞ்சாவூர் மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய கனமழை இந்த ஆண்டு பெய்துள்ளது. இதில் 60 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளதால், சுமார் ஏழாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.

இன்னும் மூன்று, நான்கு நாள்களில் நீர் வடியவில்லை என்றால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தனர். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் பரிந்துரைசெய்யப்படும் என அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: Omicron Variant Virus: கோவை விமான நிலையத்தில் ஒமைக்ரான் தொற்றுப் பரிசோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.