ETV Bharat / state

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கவில்லை - கோவை செல்வராஜ் அதிரடி!

author img

By

Published : Jul 26, 2022, 4:06 PM IST

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிக்கலாவை நீக்கவில்லை - கோவை செல்வராஜ்
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிக்கலாவை நீக்கவில்லை - கோவை செல்வராஜ்

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியின் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த கோவை செல்வராஜ், "தமிழ்நாடு முழுவதும் கழகத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்த அறிவிப்பு வர இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி டெண்டர் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது என்பது உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்குச் சான்று. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும்.

மக்கள் வரிப்பணத்தை யார் ஏமாற்றி இருந்தாலும் அது தவறு. தன் மீது தவறு உள்ளதா இல்லையா என்பதை அவர் தான் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுகவிற்கும் சம்பந்தமே இல்லை. அவரை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டோம். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் எடுப்பது தான் அதிமுகவில் முடிவு.

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கவில்லை - கோவை செல்வராஜ் அதிரடி!

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜூலை 28ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியைச் சந்திப்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தான் முடிவு எடுப்பார். அதை அவர்தான் தேர்வு செய்ய வேண்டும். அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கவில்லை. அவர் இன்றும் அதிமுகவில் தான் இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் பட்டா நிலம், எடப்பாடி பழனிசாமி புறம்போக்கு நிலம். எனவே பட்டா நிலத்திற்கு தான் செல்வாக்கு அதிகம் இருக்கும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும்- முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.