ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும்- முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

author img

By

Published : Jul 26, 2022, 8:04 AM IST

தமிழ்நாட்டின் நிலைமை மாற, ஆட்சி மாற்றம் வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் நிலைமை மாற ஆட்சி மாற்றம் வேண்டும்- முன்னாள் அமைச்சர் கேடிஆர்
தமிழ்நாட்டின் நிலைமை மாற ஆட்சி மாற்றம் வேண்டும்- முன்னாள் அமைச்சர் கேடிஆர்

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாவாடி தோப்பு பகுதியில் மின் கட்டணம், வீட்டு வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து நேற்று(ஜூலை 25) முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி, "ஸ்டாலின் மக்களை பற்றி கவலைபடுவதில்லை எனவும், இத்தகைய நிலை மாற ஆட்சி மாற்றம் வர வேண்டும் எனவும் கூறினார்.

‘பால் விலை, ஆவின் விலை உயர்வு என எதையும் திமுக கூட்டணி கட்சி கேட்க தயாராக இல்லை என குற்றம்சாட்டினார். இதை எதிர்த்து கேட்கும் கட்சியாக அதிமுக மட்டுமே உள்ளது . ஸ்டாலின் மக்களை பற்றி கவலைப்படுவதில்லை எனவும், தன் மக்களை மட்டும் பார்க்கிறார் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் நிலைமை மாற ஆட்சி மாற்றம் வேண்டும்- முன்னாள் அமைச்சர் கேடிஆர்

விலையேற்றம் குறித்து அமைச்சர்கள் கவலைப்படுவதில்லை இல்லை என அவர் தெரிவித்தார். இதுகுறித்து கேட்டகவும் யாருக்கும் தைரியமும் இல்லை, திராணியும் இல்லை எனக் கூறினார். ஆட்சியாளர்கள் கிடைப்பதை சுருட்டிக்கொண்டு சென்று விடலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.

நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நடந்தால் வரி என எதற்கெடுத்தாலும் வரி விதித்தால் எப்படித்தான் சாப்பிடுவது என அவர் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:ஸ்டாலின் தனது வறட்டு கெளரவத்திற்காக மக்களை துன்பப்பட வைக்கிறார் - அதிமுக ப. குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.