ETV Bharat / sports

Virat Kohli: கோலியின் சதம் குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 6:39 PM IST

KL Rahul about Virat Kohli Century
KL Rahul about Virat Kohli Century

World Cup 2023: வங்கதேசம் அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்தது குறித்து சக வீரர் கே.எல்.ராகுல் மனம் திறந்து உள்ளார்.

புனே: வங்கதேசம் - இந்திய இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் நேற்று (அக்.19) புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 48வது சதத்தை விளாசினார்.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 256 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66 ரன்களும், தன்சித் ஹசன் 51 ரன்களும் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி அந்த இலக்கை துரத்த 41.3 ஓவர்களே எடுத்துக்கொண்டது.

தொடக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடினர். அரைசதத்தை நெருங்கிய ரோஹித் சர்மா 48 ரன்களில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் இருந்த மற்றொறு தொடக்க வீரரான கில், அரைசதம் விளாசினார். ரோஹித் சர்மா பெவிலியன் திரும்பியதும், களம் புகுந்த விராட் கோலி, தனக்கு கிடைத்த நோ பாலின் மூலம் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்.

மறுமுனையில் கில், ஷ்ரேயாஸ் என விக்கெட்கள் சரிந்தாலும், கோலி நிலைத்து நின்று சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய கோலி ஃபோர், சிக்ஸ் என ரன்களை குவித்த நிலையில், 80 ரன்களை கடந்தார். அப்போது வெற்றிக்கு 20 ரன்கள் தேவையாக இருந்தது. அதேசமயம் கோலியின் சதத்திற்கும் 20 ரன்கள் தேவையாக இருந்தது.

கோலி சதம் அடிக்க வேண்டும் என்றால் அவரே வெற்றிக்கு தேவையாக இருக்கும் அனைத்து ரன்களையும் முழுவதுமாக அடிக்க வேண்டும். கே.எல். ராகுல் ரன்கள் அடித்தால் அவரால் சதம் அடிக்க இயலாது என்ற சூழ்நிலை இருந்தது. கே.எல் ராகுலின் ஒத்துழைப்பால் விராட் கோலி சதம் அடித்தார்.

ஒற்றை ஆளாக நின்று ரன்களை குவித்து சதமும் அடித்தார். அதேசமயம் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இதன்மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 78வது சதத்தை பூர்த்தி செய்தார். அணிக்கு வெற்றியை தேடி தந்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், போட்டியின் முடிவுக்கு பிறகு பேசிய கே.எல்.ராகுல் கூறியதாவது; "அவர் குழப்பத்தில் இருந்தார். சிங்கில் எடுக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது. எனது தனிப்பட்ட சாதனைக்காக விளையாடியது போல் மக்கள் நினைப்பார்கள் என்று விராட் கோலி கூறினார். ஆனால், நாம் எவ்வித சிரமமுமின்றி வெற்றி பெறலாம், நீங்கள் சதத்தை நிறைவு செய்யுங்கள் என்று நான் தான் சென்னேன்" என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: Hardik Pandya: நியூசிலாந்து ஆட்டத்தில் ஹர்திக் விலகல்? ஷமியா? சூர்யகுமாரா? யாருக்கு வாய்ப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.