ETV Bharat / entertainment

வீட்ல விசேஷம் திரைப்படத்தில் நடித்தது திருப்தி அளிக்கிறது - நடிகை ஊர்வசி புகழாரம்!!

author img

By

Published : Jun 16, 2022, 11:49 AM IST

ஆர்.ஜே.பாலாஜி ஒரு புத்திசாலியான திரைப்பட இயக்குனர் - நடிகை ஊர்வசி புகழாரம்!!
ஆர்.ஜே.பாலாஜி ஒரு புத்திசாலியான திரைப்பட இயக்குனர் - நடிகை ஊர்வசி புகழாரம்!!

வீட்ல விசேஷம் திரைப்படத்தில் நடித்தது திருப்தி அளிப்பதாக நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக போற்றப்படுபவர் நடிகை ஊர்வசி. ஜூன் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி நடித்த “வீட்ல விசேஷம்” திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார்.

இது குறித்து நடிகை ஊர்வசி கூறியதாவது, “வீட்ல விசேஷம் திரைப்படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்தது. மிகவும் அரிதாகவே, ஒரு கலைஞருக்கு மதிப்புமிக்க கதை, தெளிவான பார்வை கொண்ட நல்ல திரைப்பட இயக்குநர்கள் மற்றும் அற்புதமான சக நடிகர்கள் கொண்ட ஒரு படம் கிடைக்கிறது. இந்தப் படம் எனக்கு அப்படிப்பட்ட ஒரு படமாக அமைந்தது. சத்யராஜ் சாருடன் திரையை பகிரும் வாய்ப்பு ஒரு முக்கியமான காரணம்.

நடிப்பின் மூலமாக மற்றவர்களை ஈர்க்கும் திறமை பெற்ற நடிகர்களுடன் பணியாற்றுவதை நான் எப்போதும் ரசிப்பேன், அப்படிபட்ட ஒரு நடிகர் சத்யராஜ். இது எனது பாத்திரத்தையும் சிறப்பாக வழங்க உதவியது. ஆர்.ஜே.பாலாஜி புத்திசாலித்தனமிக்க ஒரு தெளிவான திரைப்பட இயக்குநர், மேலும் அவரது குழுவினரிடமிருந்து சிறந்த உழைப்பை பெற்று விடுவார். ஆர்.ஜே.பாலாஜி ஜாலியாகவும் துடிப்பாகவும் இருக்கும் போது, ​​NJ சரவணன் அமைதியாகவும், இறுதி வெளியீட்டைப் பெறுவதில் கெட்டிகாரராகவும் இருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜி ஒரு புத்திசாலியான திரைப்பட இயக்குனர் - நடிகை ஊர்வசி புகழாரம்!!
ஆர்.ஜே.பாலாஜி ஒரு புத்திசாலியான திரைப்பட இயக்குனர் - நடிகை ஊர்வசி புகழாரம்!!

வீட்ல விசேஷம் படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு கிடைக்க போகும் அனுபவங்களை பற்றி ஊர்வசி கூறும்போது, ​​“சமீப காலமாக, ஒரு குறிப்பிட்ட குழுவினரின் ஆர்வத்தையும் ரசனையையும் பூர்த்தி செய்யும் திரைப்படங்களை நாம் பார்க்கிறோம். இருப்பினும், வீட்ல விசேஷம் திரையரங்குகளில் அனைவரையும் மகிழ்விக்கும் மற்றும் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும்” என கூறினார்.

வீட்ல விசேஷம் படத்தை ஆர்.ஜே.பாலாஜி, NJ சரவணன் இயக்கியுள்ளனர் மற்றும் Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர், Romeo Pictures இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப்படம் இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘பதாய் ஹோ’ படத்தின் ரீமேக்காகும்.

இதையும் படிங்க: சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா நடிப்பாரா?.... ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.