ETV Bharat / city

இனி ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் - தமிழ்நாடு அரசு

author img

By

Published : May 27, 2022, 2:23 PM IST

அரசாணை
அரசாணை

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாடு அரசு இன்று (மே. 27) வெளியிட்டுள்ள அரசாணையில், குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 தினங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது. அதனுடன் சேர்த்து முதலமைச்சர் அறிவித்தபடி உலக தண்ணீர் தினமான மார்ச் 22, உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1 ஆகிய தேதிகளிலும் இனி கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் தண்ணீர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தண்ணீரை சிக்கனமாக கையாண்டு "உயிர்போல் காப்போம்" என்ற உறுதிமொழி ஏற்க உத்தரவிட்டுள்ளது.

அரசாணை
அரசாணை

நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குட்கா, பான் மசாலா விற்பனை செய்ய மேலும் ஓராண்டு தடை: தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.