ETV Bharat / city

எல்ஐசி பங்குகள் விற்பனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

author img

By

Published : Mar 23, 2022, 6:36 AM IST

mhc-dismissed-plea-against-sale-of-lic-shares
mhc-dismissed-plea-against-sale-of-lic-shares

எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் வகையில் நிதிச் சட்டத்திலும், எல்ஐசி சட்டத்திலும் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பங்குகளை விற்பனை செய்யும் வகையில், நிதிச் சட்டத்திலும் எல்ஐசி சட்டத்திலும் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தங்களை எதிர்த்து, எல்ஐசி பாலிசிதாரரான பொன்னம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "இந்திய அரசியல் சாசனம் 110ஆவது பிரிவின் கீழ் பண மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட இந்த திருத்தங்கள், பணமசோதா வரம்புக்குள் வராது. இதனை ரத்து செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "எல்ஐசி பங்குகளில் 5 சதவீதத்தை விற்பனை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனடிப்படையில் இந்த சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது சட்டப்படி செல்லும். எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பாலிசி எடுத்துள்ள மனுதாரர், 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு நிதி கிடைக்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிதி நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். அரசின் பொது நல கொள்கையில் தலையிட முடியாது என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபா வழக்கு: இப்போதைக்கு குற்றப்பத்திரிக்கை வேண்டாம் - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.