ETV Bharat / bharat

போக்குவரத்து விதி மீறல்: 26,000 வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப் பரிந்துரை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 1:21 PM IST

Updated : Sep 24, 2023, 1:44 PM IST

violation-of-traffic-rules-26000-motorists-recommended-to-cancel-their-license
போக்குவரத்து விதி மீறல்: 26,000 வாகன ஓட்டிகளின் லைசென்சை ரத்து செய்ய பரிந்துரை

Violation of Traffic Rules: புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்ற 26,000 இருசக்கர வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகப் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

போக்குவரத்து விதி மீறல்: 26,000 வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப் பரிந்துரை!

புதுச்சேரி: மிகப் பிரபலமாக இருக்கும் சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கக் கூடிய புதுச்சேரியில் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நகர மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களைக் கண்காணித்து, வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கும் வகையில் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறைக்கு 16 லட்சம் மதிப்பிலான நவீன லேசர் வேக அளவீடு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, புதுச்சேரி நகர்ப் பகுதிகளில் 30கி.மீ வேகத்திலும், புற நகரப் பகுதிகளில் 50 கி.மீ வேகத்திலும் செல்ல வேண்டும் என என அறிவுறுத்தப்பட்டிருந்தன. இதனை மீறும், வாகனங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், ரேஸ்களில் ஈடுபட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனப் போக்குவரத்து போலிஸார் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்ற 26,000 இருசக்கர வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகப் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Nellai - Chennai Vande Bharat Train : நாட்டில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி துவக்கி வைப்பு!

இதுதொடர்பாக, புதுச்சேரி போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் பிரிஜேந்திர குமார் செய்தியாளர்களிடம் கூறும் போது, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி சாலை விபத்துக்களைத் தடுக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டன. இக்குழு ஆய்வின்படி, புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயமாக்கலை மக்களிடையே தீவிரமாக்க வேண்டும். எனவே, வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை இயக்கவில்லை எனில் அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, வாகன உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

இதுவரை, புதுவையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 42 ஆயிரம் வாகனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. 26 ஆயிரம் வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய RTOக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மேலும், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 4600 பேருக்கு அபராதமும், செல்போன் பேசியபடி காரை இயக்கிய 2900 போர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

கடந்த, ஜனவரி மாதம் முதல் தற்போது வரை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 108 போர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைவாகும். இருப்பினும் பொதுமக்கள் சாலை விபத்துகளைத் தவிர்க்கப் போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டும். அத்துடன் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் வாகன ஓட்டிகள் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம் எனவும் தெரிவித்தார். பேட்டியின்போது போக்குவரத்து எஸ்.பி மாறன் (கிழக்கு/வடக்கு), இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: "டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிக்கும் பணிகள் தீவிரம்" - தருமபுரி ஆட்சியர் கூறும் அறிவுரைகள்

Last Updated :Sep 24, 2023, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.