ETV Bharat / bharat

பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு!

author img

By PTI

Published : Sep 8, 2023, 9:10 PM IST

Etv Bharat
Etv Bharat

PM Modi - Joe Biden Meet: ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வந்து உள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார்.

டெல்லி: இந்தியா தலைமை தாங்கும் ஜி20 மாநாடு நாளை (செப் 9) மற்றும் நாளை மறுநாள் (செப் 10) டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக டெல்லி முழுமையும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், உலகத் தலைவர்களின் வருகையால், டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இதனிடையே, இந்த ஜி20 மாநாட்டிற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று (செப் 8) இந்தியா வந்து அடைந்தார். இவ்வாறு டெல்லி விமான நிலையம் வந்து அடைந்த ஜோ பைடனை ஓய்வு பெற்ற சிவில் விமானப்போக்குவரத்து ஜெனரல் விகே சிங் வரவேற்றார்.

இதனையடுத்து, அவர் அங்கு இருந்து புறப்பட்டு ஹோட்டலுக்குச் சென்றார். சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர், அவர் பிரதமர் மோடியின் இல்லத்திற்குச் சென்று உள்ளார். அப்போது அவரை பிரதமர் மோடி வரவேற்றார். இதனையடுத்து, இருவரும் முக்கிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்த நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பிரதமர் மோடி தனது 'X' வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், “டெல்லிய்ல் உள்ள எண் 7 லோக் கல்யான் மார்க்கில் (LKM) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முக்கிய பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த இந்த ஆலோசனை உதவும்” என தெரிவித்து உள்ளார். முன்னதாக, அமெரிக்க அதிபரின் பக்கத்தில் ஜி20 மாநாடு குறித்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது.

  • I’m headed to the G20 – the premier forum for international economic cooperation – focused on making progress on Americans' priorities, delivering for developing nations, and showing our commitment to the G20 as a forum that can deliver.

    Every time we engage, we get better.

    — President Biden (@POTUS) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், “நான் G20 மாநாட்டுக்குச் செல்கிறேன். சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை அமைப்பு - அமெரிக்கர்களின் முன்னுரிமைகளில் முன்னேற்றம், வளரும் நாடுகளுக்கு வழங்குதல் மற்றும் G20-க்கான நமது உறுதிப்பாட்டை வழங்கக்கூடிய ஒரு அமைப்பாக காட்டுவதில் கவனம் செலுத்துகிறது. நாம் ஈடுபடும் ஒவ்வொரு முறையும், நாம் சிறப்பாக வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் பிரதமர் மோடி, கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவு, கொமோரோஸ், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் கொரியா, ஐரோப்பிய நாடுகள், பிரேசில் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல், இங்கிலாந்து பிரதமர் ரிஷு சுனக் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்களும் ஜி20 மாநாட்டிற்காக டெல்லியில் குழுமி உள்ளனர்.

இதையும் படிங்க: G20 Summit: 15க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் உடன் பிரதமர் சந்திப்பு - உலக அளவில் வலுவடையும் இந்தியாவின் உறவுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.