ETV Bharat / bharat

ராமோஜி பிலிம் சிட்டியில் ஐசிசி உலகக்கோப்பை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 7:11 PM IST

Updated : Sep 21, 2023, 6:34 AM IST

Etv Bharat
Etv Bharat

ICC World cup trophy: உலகின் மதிப்பு மிகுந்த கோப்பைகளில் ஒன்றாக கருதப்படும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிராபி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் காட்சிப்படுத்தப்பட்டது.

உலகின் மதிப்பு மிகுந்த கோப்பைகளில் ஒன்றாக கருதப்படும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிராபி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் காட்சிப்படுத்தப்பட்டது

ஐதராபாத்: ராமோஜி பிலிம் சிட்டியில் (Ramoji Film City) உள்ள தனிச்சிறப்பு வாய்ந்த கேரம் கார்டனில் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் கோப்பை இன்று (செப்.20) காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், ராமோஜி பிலிம் சிட்டி நிர்வாக இயக்குநர் Ch.விஜயேஸ்வரி மற்றும் ஈநாடு (Eenadu) நிர்வாக இயக்குநர் ஷஹரி ஆகியோர் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தினர்.

வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த விழாவில் ஈ.நாடு (Eenadu) நிர்வாக இயக்குநர் Ch.கிரண், ஈநாடு மற்றும் ஈ.டிவி (ETV) தலைமைச் செயல் அதிகாரி பாபிநீடு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக, இந்த உலகக்கோப்பையானது இது வரையிலும் 18 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளது. குறிப்பாக, குவைத், பஹ்ரைன் மலேசியா, அமெரிக்கா, நைஜீரியா, உகாண்டா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற பின்னர், தற்போது மீண்டும் இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 27ஆம் தேதி தனது பயணத்தை துவக்கிய இந்த டிராபி, செப்டம்பர் 4 அன்று மீண்டும் இந்தியா வந்தடைந்தது.

உலகக்கோப்பையை யாரால் தொட முடியும்? ஐசிசியின் மதிப்பு வாய்ந்த இந்த டிராபியை தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்கள் மட்டுமே தொடவோ அல்லது தூக்கி வைத்து புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கப்படுவார்கள். இதன்படி, ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்ற வீரர்கள் மற்றும் தற்போதைய ஐசிசி உலகக் கோப்பை தொடர் மற்றும் தகுதிப் போட்டிகளில் பங்கேற்று உள்ள சர்வதேச வீரர்கள் மட்டுமே கோப்பையைத் தொடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

உண்மையான கோப்பை யாருக்கு கிடைக்கும்? இதற்கான பதில் யாருக்குமே இல்லை என்பதுதான். ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை டிராபி என்பது உலக கிரிக்கெட்டுக்கான ஒரு பொக்கிஷம் ஆகும். இது முழுவதும் ஐசிசிக்கு மட்டுமே சொந்தமானது. ஒவ்வொரு சீசனின்போதும் வெற்றியாளர்களின் கையில் இந்த கோப்பையின் நகல் மட்டுமே வழங்கப்படுகிறது. அதேநேரம், அசல் கோப்பையில் வெற்றியாளர்களின் பெயர் பொறிக்கப்படும்.

உலகக் கோப்பை எப்படி இருக்கும்? உலகக் கோப்பை டிராபியானது லண்டனில் உள்ள கார்ராடு (Garrard) ஜுவல்லர்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. 60 செ.மீ உயரம் கொண்ட இந்த டிராபியானது வெள்ளியால் வடிவமைக்கப்பட்டிருக்கும். மூன்று வெள்ளி தூண்களின் உச்சியில் தங்க உருளை இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

இந்த தங்க உருளையானது கிரிக்கெட் பந்தினை குறிக்கும் வகையில் உள்ளது. மாறாக, வெள்ளித் தூண்கள் ஸ்டம்ப்கள் மற்றும் பெயில்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். கிரிக்கெட் விளையாட்டின் முக்கிய அம்சங்களான பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கை குறிக்கும் வகையில் இதன் வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கும்.

உலகக்கோப்பையின் விலை என்ன? தற்போதைய நிலவரப்படி, 40 ஆயிரம் யூரோக்கள், அதாவது இந்திய மதிப்பின்படி, சுமார் 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த கோப்பையானது 11 கிலோ எடை கொண்டது. எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும், இந்த கோப்பையின் தனித்துவத்தை அறிந்து கொள்ளும் வகையில், பிளாட்டோனிக் டைமன்ஷன் என்ற வடிவமைப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐசிசி உலகக்கோப்பை எப்போது முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது? தற்போதைய டிராபியின் வடிவமைப்பு , 1999ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முதல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உள்ளது. இதன் கீழ்புறத்தில் உலகக் கோப்பையின் முந்தைய வெற்றியாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் நகல்கள் வெற்றியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.

உலகக்கோப்பை எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டது? உலகக் கோப்பை அறிமுக விழாவை தனித்துவமாக்கும் வகையில், விண்வெளியில் ஸ்ட்ரேடோஸ்பியர் (stratosphere) எனும் அடுக்கில் அறிமுக விழாவை நடத்தியது, ஐசிசி. அதாவது புவியில் இருந்து சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில், மைனஸ் 65 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. புவியின் வளிமண்டலத்திற்கு மேல் இருந்து பின்னர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு கோப்பை கொண்டு வரப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ‘பிசிசிஐ கோல்டன் டிக்கெட்’.. நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்!

Last Updated :Sep 21, 2023, 6:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.