ETV Bharat / bharat

வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்.. 18 மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.. உ.பி.யில் உச்சக்கட்ட கொடூரம்!

author img

By

Published : May 16, 2023, 7:18 PM IST

Pocso
Pocso

உத்தரபிரதேசத்தில் ஆசிரியரின் பாலியல் சில்மிஷத்தால் மிரண்டு போன மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல மறுக்கும் அவலம் அரங்கேறி உள்ளது.

ஷாஜகான்பூர் : உத்தரபிரதேசத்தில் 18 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி கணினி ஆசிரியர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தர பிரதேசம் மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் 50 மாணவிகள் உள்பட 115 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் பள்ளியில் மாணவர்களின் வருகை குறைந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண் மாணவிகள் பள்ளிக்கு வருவதை படிப்படியாக நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.

பள்ளிக்கு மாணவர்கள் வருகை 35 சதவீதமாக குறைந்ததை அடுத்து இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு, கணினி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. கணினி ஆசிரியரால் ஏறத்தாழ 18 மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அதில் மிரண்டு போன மாணவிகள் பள்ளிக்கு வருவதை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூற பயந்து போய் பள்ளிக்கு வருவதையே முற்றிலுமாக தவிர்த்ததாக சொல்லப்படுகிறது. இந்த உண்மை கடந்த 13 ஆம் தேதி மாணவிகளின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், கிராம மக்கள் அனைவரும் பள்ளியில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இது தொடர்பாக கணினி ஆசிரியர் மீது மாணவிகள் மற்றும் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பள்ளியின் கணினி ஆசிரியரை கைது செய்தனர். மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து முன்கூட்டியே அறிந்தும், அது குறித்து புகார் தெரிவிக்காத பள்ளியின் உதவி ஆசிரியர் மற்றும் முதல்வர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

கணினி ஆசிரியர், உதவி ஆசிரியர், பள்ளி முதல்வர் என மூன்று பேர் மீது எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் சோதனை நடத்திய போது கழிவறை யில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கல்வி கற்றுத் தரும் ஆசிரியரே தன் எல்லையை மீறி தகாத முறையில் நடந்து கொண்டதால் மாணவிகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது. கல்வி மீதான ஈர்ப்பு மாணவிகளுக்கு வெறுப்பாக மாறாமல் இருக்க, மனோதத்துவ நிபுணர்கள் கொண்டு மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்க உள்ளதாகவும், மாணவிகள் தங்களது கல்வியை மீண்டும் தொடர வழிவகை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இதையும் படிங்க : கர்நாடகா முதலமைச்சர் யார்? காங்கிரஸ் தலைவர் சூசகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.