ETV Bharat / bharat

கர்நாடகா முதலமைச்சர் யார்? காங்கிரஸ் தலைவர் சூசகம்!

author img

By

Published : May 16, 2023, 6:15 PM IST

இன்று அல்லது நாளைக்குள் கர்நாடக முதலமைச்சர் யார் என்பது முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் ஊடகப் பிரிவின் தலைவர் பவான் கெரா தெரிவித்து உள்ளார்.

Pawan Khera
Pawan Khera

ஐதராபாத் : கர்நாடக முதலமைச்சரை தேர்வு செய்யும் பணி அதிதீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று அல்லது நாளைக்குள் முதலமைச்சர் இறுதி செய்யப்படுவார் என காங்கிரஸ் ஊடகப் பிரிவின் தலைவர் பவான் கெரா தெரிவித்து உள்ளார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த மே. 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மே.13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

இருப்பினும் முதலமைச்சர் யார் என்பது தேர்வு செய்யும் சிக்கலுக்குள் காங்கிரஸ் கட்சி திண்டாடி வருகிறது. முதலமைச்சர் ரேசில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரில் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் தங்கள் ஆதரவுகளுடன் டெல்லி விரைந்து உள்ளனர். டெல்லியில் முகாமிட்டு உள்ள இருவரும் காங்கிரஸ் மேல்மட்ட தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். கர்நாடகாவிற்கு அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் சட்டமன்ற குழு வழங்கியதே இந்த பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள மல்லிகார்ஜூன கார்கேயின் வீட்டில் வைத்து கர்நாடகாவின் முதலமைச்சரை தேர்வு செய்யும் ஆலோசனையில் காங்கிரஸ் மேலிடக் குழு ஈடுபட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உள்ளார். இந்நிலையில், இன்று (மே.16) அல்லது நாளைக்குள் (மே.17) கர்நாடக முதலமைச்சரை காங்கிரஸ் மேலிட குழு முடிவு செய்யும் என காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவின் தலைவர் பவான் கெரா தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், மாநிலத்தின் எதிர்க் கட்சித் தலைவர் என்பது சமமான மற்றும் மிக முக்கியமான ஒன்று என்றும் கர்நாடகாவில் எதிர்கட்சித் தலைவராக பாஜக யாரை நியமிக்கப் போகிறது என்பதை அறிய விரும்புவதாக அவர் கூறினார். அதேபோல், முதலமைச்சரை நியமிப்பது எளிதான காரியம் இல்லை என்றும், அது டெல்லியில் இருந்து திணிக்க முடியாது என்றும் கூறினார்.

முதலமைச்சர் தேர்வு விவகாரத்தில் அனைவரின் கருத்துகளையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் ஒவ்வொருவருடனும் கலந்து பேசி, முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், அப்பணியை மேற்கொள்பவர்கள் கள் ஆய்வில் ஈடுபடத் தொடங்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு நடைபெற்ற நிலையில் அவர்கள், தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினர்.அனைத்து தரப்பு கருத்துகளும் காங்கிரஸ் மேலிடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்று அல்லது நாளைக்குள் முதலமைச்சர் யார் என்பது இறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : மே.வங்கத்தில் பட்டாசு ஆலை விபத்து - ஆலையில் வெடிகுண்டு தயாரிப்பா? என்.ஐ.ஏ. விசாரிக்க கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.