ETV Bharat / bharat

மே.வங்கத்தில் பட்டாசு ஆலை விபத்து - ஆலையில் வெடிகுண்டு தயாரிப்பா? என்.ஐ.ஏ. விசாரிக்க கோரிக்கை!

author img

By

Published : May 16, 2023, 5:19 PM IST

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், உயிரிழப்பு நினைத்து பார்க்கும் எண்ணிக்கையை விட அதிகம் என்றும், உயிரிழந்தவர்களின் சடலங்களை மம்தாவின் போலீசார் கடத்திச் செல்வதற்குள் அங்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சுவெந்து அதிகாரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

West Bengal
West Bengal

ஈக்ரா : மேற்கு வங்கத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் ஈக்ராவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அருகில் உள்ள கிராமங்களை வரை இந்த வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த கோர வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் கட்டடங்கள் இடந்து தரைமட்டமாகின.

இந்த கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்த முழுவிபரம் தெரிவிக்கப்படாத நிலையில், 3 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 பேர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

அதேநேரம் பட்டாசு ஆலையில் வெடிகுண்டு தயாரித்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவெந்து அதிகாரி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சுவெந்து அதிகாரி தன் ட்விட்டர் பக்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவரின் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதாகவும் அதில் ஏற்பட்ட விபத்தில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

விரைவில் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கோர விபத்து சட்ட ஒழுங்கு பிரச்சினையை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவித்து உள்ளார். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நினைத்து பார்பதை விட அதிகரித்து இருக்கலாம் என்றும் உயிரிழந்தவர்களின் சடலங்களை மம்தாவின் போலீசார் சட்டவிரோதமாக கடத்திச் செல்வதற்குள் சம்பவ இடத்தில் மத்திய படையினரை நிறுத்த வேண்டும் என்றும் சுவெந்து அதிகாரி தெரிவித்து உள்ளார்.

பட்டாசு விபத்து நடந்த இடத்தில் சாட்சியங்கள் அழிக்கப்படுவதற்குள் பிரதமர் மோடி, மேற்கு வங்க அளுநர் உள்ளிட்டோர் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏயின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சுவெந்து அதிகாரி கோரிக்கை விடுத்து உள்ளார். மேலும், மேற்கு வங்கம் வெடிகுண்டு தயாரிப்பின் கூடாரமாக மாறி உள்ளதாகவும் இறைவன் தான் மாநிலத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் தன் ட்விட்டர் பக்கத்தில் சுவெந்து அதிகாரி தெரிவித்து உள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் போலீசார் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காதுகளை உறைய வைக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் அலறல் சத்தம் அங்குள்ள மக்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. உள்ளூர் மக்களின் தகவலின் படி பட்டாசு ஆலை விபத்து 21 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவராத நிலையில், அதுகுறித்து விசாரித்து வருவதாகவும், ஆலை உரிமையாளர் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். விபத்து நடந்து வெகுநேரம் கழித்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், அதுகுறித்து கேட்ட மக்களை அதிகாரத் தோரணையில் போலீசார் விரட்டி அடித்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதனிடையே பட்டாசு ஆலை விபத்து குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, விபத்து தொடர்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Sunil Gavaskar: நான் இறப்பதற்கு முன் டோனியின்... சுனில் கவாஸ்கர் உருக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.