ETV Bharat / state

பாலியல் வன்கொடுமை: பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா மீது போக்சோ வழக்குப்பதிவு! - pocso case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 5:25 PM IST

BJP MS Shah pocso case
BJP MS Shah pocso case

Madurai BJP leader MS Shah pocso case: பைக் வாங்கித் தருவதாக கூறி 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் கீழ் பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

மதுரை: பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். இவர், சமீபகாலமாக பாஜக தலைவர்களோடு மிக நெருக்கமாக இருந்து வருவதும், அது தொடர்பான படங்களையும் தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், பாஜக பிரமுகரான எம்.எஸ்.ஷா மீது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், "தனது மகளின் செல்போனிற்கு பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் வந்ததாகவும், இதையடுத்து தனது மகளை கேட்டபோது, தனது மனைவி மகளை பள்ளிக்கு அழைத்து செல்லாமல் அடிக்கடி தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்து சென்று பாஜக பிரமுகரிடம் தனியாக இருந்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும், வாட்ஸ் அப் மூலமாக நான் கூப்பிடும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என ஆசை வார்த்தையை கூறி அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். மேலும், வேறு மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று தனியார் சொகுசு விடுதியில் தங்கியும் பாலியல் பலாத்காரம் செய்து அதற்கு பதிலாக புதிய ஆடைகள் மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார்.

பாஜக பிரமுகர் ஷா, முதலில் தனது மனைவியிடம் தங்களது கடனை அடைத்து விடுவதாக கூறி மனைவியுடன் தகாத உறவில் இருந்துத்தோடு மனைவி மூலமாக மகளையும் அழைத்துச் சென்று பாலியல் துன்பறுத்தல் அளித்துள்ளார். இதற்கு முழுமையாக தனது மனைவியும் உடந்தையாக இருந்து வந்துள்ளார்" என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்.எஸ். ஷா மீதும் மற்றும் பள்ளி மாணவியின் தாய் ஆகிய இருவர் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4), 12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக நிர்வாகி கல்லூரி நடத்தி வரும் நிலையில் அவர் மீது பள்ளி மாணவியின் தந்தை அளித்த புகாரின் கீழ் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் மீண்டும் பிரதமர் மோடியின் ரோடு ஷோ! தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! - PM Modi Road Show In Chennai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.