தமிழ்நாடு

tamil nadu

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

By

Published : Aug 26, 2021, 7:55 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்குகள்

திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி அளித்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் திறக்கப்பட்டுள்ளன.

2. கைக்குழந்தைகளுடன் வடமாநில பெண் தூக்கிட்டுத் தற்கொலை - போலீஸ் விசாரணை

கோயம்புத்தூரில் வேலை செய்து வரும் நேபாளத்தைச் சேர்ந்தவரின் மனைவி, கைக் குழந்தைகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3. ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை - எம்.எல்.ஏ. கருணாநிதி

கலை, அறிவியல் கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவர்களின் சேர்க்கையை ஒற்றை சாளர முறையில் நடைமுறைப்படுத்த சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

4. மீரா மிதுன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மிரட்டல் விவகாரத்தில் நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

5. 'எழுத்துகளை மத கண்ணாடி கொண்டு பார்க்கக் கூடாது' - முதலமைச்சர்

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, எழுத்துகளை அரசியல்-மத கண்ணாடி கொண்டு பார்க்கக் கூடாது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

6. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த கவனம் செலுத்துக - கமல்ஹாசன் அறிவுரை!

கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மநீம கட்சித்தலைவர் கமல் ஹாசன், தனது கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

7. அதிகமான கரோனா சிகிச்சை கட்டணம் - மருத்துவமனைக்கு நோட்டீஸ்!

கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

8. தமிழ்நாடு கல்வியில் சிறந்திட கவனம் வேண்டும் - ஊர்வசி செ. அமிர்தராஜ்

கல்வியில் உலக அளவில் தமிழ்நாடு சிறந்திட உயர் கல்விக்கு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும் என திருவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி செ. அமிர்தராஜ் தெரிவித்துள்ளார்.

9. அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் திருட்டு - சிசிடிவியைக் கொண்டு விசாரணை

கரூரில் அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்களை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை, சிசிடிவி உதவியுடன் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

10. ஒடுக்கப்படும் மக்களின் குரல் ஒலிக்க தடை; கோபத்தில் கவிஞர் சுகிர்தராணி

மத்திய அரசு சமுதாய மாற்றத்தை விரும்பவில்லை. புதிய கல்விக் கொள்கை மூலம் சமுதாயத்தை பின்னோக்கி எடுத்துச் செல்ல பார்க்கிறது. அவர்கள் அடக்க அடக்க இது பீறிட்டுத் தான் எழும். இதனால் அது அடங்கிப் போகாது என்கிறார் சுகிர்தராணி.

ABOUT THE AUTHOR

...view details