ETV Bharat / city

'எழுத்துகளை மத கண்ணாடி கொண்டு பார்க்கக் கூடாது' - முதலமைச்சர்

author img

By

Published : Aug 26, 2021, 6:07 PM IST

Updated : Aug 26, 2021, 6:53 PM IST

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, எழுத்துகளை அரசியல்-மத கண்ணாடி கொண்டு பார்க்கக் கூடாது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

cm-mk-stalin
cm-mk-stalin

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்தில் இருந்து, தமிழ் எழுந்தாளர்கள் பாமா, சுகிர்தராணி படைப்புகளை பாடத்திட்ட மேற்பார்வைக் குழுவினர் ஆகஸ்ட் 24ஆம் தேதி நீக்கியுள்ளனர். பேராசிரியர்களின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், பாமா எழுதிய 'சங்கதி', சுகிர்தராணி எழுதிய 'கைம்மாறு' ஆகிய மொழியாக்கப் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் பட்டியலின எழுத்தாளர்களாவர். இதற்கு, எதிப்பு தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீக்கப்பட்ட பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண்ணுரிமையையும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையையும் பேசும் பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் பாடத்திட்ட மேற்பார்வைக் குழுவினரால் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. எழுத்துகளை அரசியல்-மத கண்ணாடி கொண்டு பார்க்காமல் நீக்கப்பட்ட பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

  • பெண்ணுரிமை-ஒடுக்கப்பட்டோர் விடுதலை பேசும் பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் @UnivofDelhi பாடத்திட்டத்தில் நீக்கப்பட்டிருக்கின்றன.

    எழுத்துகளை அரசியல்-மதக் கண்ணாடி கொண்டு பார்க்காமல் நீக்கப்பட்ட பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்! pic.twitter.com/bi1tu0XNbZ

    — M.K.Stalin (@mkstalin) August 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஒன்றிய அரசு சமுதாயத்தை பின்னோக்கி எடுத்துச் செல்ல பார்க்கிறது

இதுகுறித்து சுகிர்தராணி ஈடிவிக்கு அளித்த சிறப்பு பேட்டியில், "டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியத்துறை இளங்கலையில் எனது 2 கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது. கைம்மாறு என்ற தலைப்பில் மலம் அள்ளும் மக்களைப் பற்றிய கவிதை, என் உடல் தலைப்பில் பெண்களின் உடலுக்கு நிகழ்த்தப்படும் வன்முறை குறித்த கவிதை.

இந்த 2 கவிதைகளும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து எந்தவிதமான தகவலும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இது முறையற்ற செயலாகும். ஒன்றிய அரசு சமூக மாற்றத்தை விரும்பவில்லை. புதிய கல்விக் கொள்கை மூலம் சமூகத்தை பின்னோக்கி எடுத்துச் செல்ல பார்க்கிறது. அவர்கள் அடக்க அடக்க இது பீறிட்டுதான் எழும். அடங்கிப் போகாது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒடுக்கப்படும் மக்களின் குரல் ஒலிக்க தடை; கோபத்தில் கவிஞர் சுகிர்தராணி

Last Updated : Aug 26, 2021, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.