ETV Bharat / state

கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த கவனம் செலுத்துக - கமல்ஹாசன் அறிவுரை!

author img

By

Published : Aug 26, 2021, 6:09 PM IST

கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மநீம கட்சித்தலைவர் கமல் ஹாசன், தனது கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவின்படி மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதனையடுத்து அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கண்டிப்பாக போட்டியிடும் என நடிகர் கமல் ஹாசன் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இருபெரும் கட்சிகளுடன் கூட்டணி?

இந்நிலையில் மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் மாநில, மண்டல செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம், ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஆக.26) நடைபெற்றது.

இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பேசுகையில், 'விரைவில் நடைபெறவிருக்கும் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்பது உறுதி. உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப தேர்தல் அறிக்கைகளைத் தயார் செய்ய வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி, அந்த நிமிடத்திற்கான கூட்டணி. உள்ளாட்சித் தேர்தலில் நாம் போட்டியிடும்போது, நம்மோடு சேர்ந்து கொள்ள வருவோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால், இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.

கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த ஆய்வு

கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை, கட்சித்தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தினார்' என்றனர்.

இதையும் படிங்க: ’தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களே மாறி மாறி ஆட்சிக்கு வரும்’- செங்கோட்டையன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.