ETV Bharat / city

’தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களே மாறி மாறி ஆட்சிக்கு வரும்’- செங்கோட்டையன்

author img

By

Published : Aug 26, 2021, 2:34 PM IST

இரு மொழிக் கொள்கையாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி திமுக அரசு ஆற்றும் நற்பணிகளுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருமான செங்கோட்டையன், ”மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் அரசு பள்ளியில் கொண்டு வரப்பட்டது.

அனைத்து வகுப்பிலும் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்தது. இந்தியாவே வியக்கத்தக்க வகையில் மருத்துவத்தில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் மாறி மாறி திராவிட இயக்கங்களே ஆட்சிக்கு வருமே ஒழிய, மற்ற எவராலும் காலூன்ற முடியாது என்பதை மக்கள் நிலைநாட்டி வருகிறார்கள். இரு மொழிக் கொள்கையாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் இந்த அரசு ஆற்றும் நற்பணிகளுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.