தமிழ்நாடு

tamil nadu

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.. தேர்தல் வியூகம் வகுக்கும் எடப்பாடி பழனிசாமி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 11:20 AM IST

AIADMK District Secretary Meeting: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் (ஜன.9) தொடங்கியது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன.9) சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இது குறித்து அதிமுக தலைமை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஜனவரி 9ஆம் தேதி காலை 10.30 மணிக்கு எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று (ஜன.9) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:மாஸ் காட்டிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024..! எவ்வளவு முதலீடு! முழு விபரமும் இதோ!

மத்தியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருந்த அதிமுக கடந்த ஆண்டு கூட்டணியை கைவிட்டதை தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறினார்.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் வியூகம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தல் பணி தொடர்பான உத்தரவுகளையும் இந்த கூட்டத்தில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர், ஆலோசனைக் கூட்டம் தொடங்கி உள்ளது.

இதையும் படிங்க:முருகன், சாந்தன் பாஸ்போர்ட் பெறுவதில் என்ன சிக்கல்? அரசு கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details