ETV Bharat / state

மாஸ் காட்டிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024..! எவ்வளவு முதலீடு! முழு விபரமும் இதோ!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 10:06 PM IST

2024 World Investors Conference
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024

2024 Global Investors Conference: சென்னையில் கடந்த இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 6.6 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

சென்னை: சென்னையில் நேற்று (ஜன. 7) மற்றும் இன்று (ஜன. 8) ஆகிய இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் எதிர்பார்ப்பையும் தாண்டி முதலீடுகள் வந்து குவிந்துள்ளன. இதுவரை இல்லாத அளவிற்கு, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய்க்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பெரு நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

இதன் மூலம் நேரடியாக 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேரும், மறைமுகமாக 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேரும் வேலைவாய்ப்பினை பெறுவர் என்றும் மொத்தமாக 27 லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள நிறுவனங்களில் ஒரு சிலவற்றின் பெயர்களும், அந்த நிறுவனங்கள் முதலீடு செய்யவுள்ள இடங்கள் மற்றும் முதலீட்டுத் தொகை ஆகியவற்றின் பட்டியல் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு.

வ.எண்நிறுவனத்தின் பெயர்முதலீடு செய்யவுள்ள இடம்முதலீட்டுத் தொகை (கோடி ரூபாயில்)
1ஃபெங் டே நான் லெதர்விழுப்புரம் 500
2ஹய் குலோரி ஃபுட்வேர்கள்ளக்குறிச்சி2,302
3ஜாங் பு - நான் லெதர்பெரம்பலூர்48
4டிகேஜி டேக்வாங்தமிழ்நாடு1,250
5ஹாங் ஃபூராணிப்பேட்டை1,500
6லாங் யின்ராணிப்பேட்டை500
7டாட்டா பவர்தமிழ்நாடு70,800
8லீப் கிரீன்தூத்துக்குடி22,842
9செம்கார்ப்தூத்துக்குடி36,238
10ZF விண்ட் cbe - ஷெல் மார்க்ஸ்தமிழ்நாடு1,070
11சிபிசிஎல்நாகை17,000
12ஹிட்டாச்சி எனர்ஜிதமிழ்நாடு100
13யுபிஎஸ்தமிழ்நாடு144
14போயிங்தமிழ்நாடு309
15மஹிந்திரா ஆர்ஜின்ஸ்தமிழ்நாடு1,800
16எல்&டிசென்னை3,500
17காவேரி மருத்துவமனைதமிழ்நாடு1,200
18சால்காம்ப்காஞ்சிபுரம்2,271
19ராயல் என்ஃபீல்டுதமிழ்நாடு3,000
20ஸ்டீலாண்டிஸ்திருவள்ளூர்2,000
21ஆனந்த் குழுகாஞ்சிபுரம்987
22TAFEதமிழ்நாடு500
23ஹிந்துஜாதமிழ்நாடு2,200
24ஷ்ஃப்ட் (Sift)தமிழ்நாடு2,500
25மைக்ரோசாப்ட்தமிழ்நாடு2,740
26டாடா கெமிக்கல்ராமநாதபுரம்1,000
27கேப்ளின் பாயிண்ட்தமிழ்நாடு700
28ஜிண்டால் டிஃபென்ஸ்திருச்சி1,000
29ராம்கோவிருதுநகர்999
30செயின்ட் கோபேன்காஞ்சிபுரம், ஈரோடு3,400
31ராமகிருஷ்ணா திதாகர்க்தமிழ்நாடு1,850
32ஃபெஸ்டோகிருஷ்ணகிரி520
33ஃபனுக்தமிழ்நாடு55
34ராம்ராஜ்தமிழ்நாடு1,000
35ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ்தமிழ்நாடு1,000
36அதானிதமிழ்நாடு42,700

இதையும் படிங்க: வேலைகளை அள்ளிக் கொடுக்கும் முதலீடுகள் - செமிகண்டக்டர் கொள்கை குறித்து ஐஐடி இயக்குநர் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.