புழல் மத்திய சிறையில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார் வைரமுத்து!

By

Published : Apr 23, 2023, 9:16 PM IST

thumbnail

உலக புத்தக தினம், இன்று (ஏப்ரல் 23) கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, இன்று புழல் மத்திய சிறை - 1 தண்டனை சிறையில், புத்தக கண்காட்சி திருவிழாவை திரைப்பட பாடல் ஆசிரியரும் கவிஞருமான வைரமுத்து திறந்து வைத்தார். இதனையடுத்து, சிறைவாசிகள் முன்னிலையில் சிறப்புரையாற்றி, புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 

அப்போது பேசிய வைரமுத்து, “நேரு, காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் அனைவரும் தலைவர்களாகி சிறைக்கு வந்தார்கள். நீங்கள் (சிறைவாசிகள்) தலைவர்களாகி சிறைக்கு வெளியே செல்லுங்கள். நிறைய புத்தகம் வாசிப்பவர்கள், அதிகம் யோசிப்பவர்களாக இருப்பார்கள். தமிழ்ச் சிந்தனையை உங்கள் மத்தியில் விதைத்துள்ளேன். 

நீங்கள் மரமாக வளர்வீர்கள் என்று நம்புகிறேன். எத்தனை மேடைகளைக் கண்டிருந்தாலும் சிறைவாசிகள் மத்தியில் பேசியது மிகவும் மன மகிழ்ச்சியைத் தருகிறது” என தெரிவித்தார். இந்த நிகழ்வில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, சிறைத் துறை துணைத் தலைவர் கனகராஜ், சென்னை சரக சிறைத் துறை துணைத் தலைவர் முருகேசன், சிறைக் கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.