நடுக்காட்டில் பைக்கை பந்தாடிய காட்டு யானை.. வைரலாகும் வீடியோ! - Elephant kicked bike viral video

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 8:30 PM IST

thumbnail
காட்டு யானை பைக்கை பந்தாடும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: கடும் கோடை வெப்பத்தால் வனப்பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் புகுவது பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் உள்ள சாலையில், அண்மைக் காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் தென்படுகிறது.

இந்த நிலையில், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள இருட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், கடம்பூரில் இருந்து இருட்டிபாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஆண் யானையைக் கண்டு பயந்துள்ளனர்.

பின்னர், தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு, யானையிடமிருந்து தப்பிப்பதற்காக வனப்பகுதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தின் அருகே நடந்து வந்த காட்டு யானை, பைக்கை கீழே தள்ளி தனது பின்னங்காலால் உதைத்து பந்தாடியது.

இச்சம்பவத்தை பைக்கில் வந்த இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அதனை அடுத்து, காட்டு யானை பைக்கை தனது காலால் உதைத்து பந்தாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.