200 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த பூனைக்குட்டி பத்திரமாக மீட்பு!
திண்டுக்கல்: 200 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த பூனைக்குட்டியை பத்திரமாக மீட்ட சம்பவம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகம்பாள் - செல்வராஜ் தம்பதியினர். இவர்கள் வீட்டில் இருவரும் செல்லமாக வளர்க்கக்கூடிய பூனைக்குட்டி ஒன்று உள்ளது. இந்த நிலையில், அந்த பூனைக்குட்டி அவர்களது வீட்டில் உள்ள 200 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்துள்ளது.
இதை அறிந்த கணவன் மனைவி இருவரும் திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை ADFO தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு பூனையை கயிறு மூலமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், பூனைக்குட்டியானது 200 அடி பள்ளத்தில் உள்ள குழாயில், 50 அடி உயரத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளது.
அப்போது பூனையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு துறையினர், ஆழ்துளைக் கிணற்றில் கயிறை உள்ளே விட்டு லாவகமாக பூனைக்குட்டியை கீழே விழாமல் மீட்டு பத்திரமாக வீட்டின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: இப்ப நான் தான் டிராபிக் போலீஸ்..! நடுரோட்டில் போதை ஆசாமி ரகளை