அண்ணாமலை யாத்திரை ஃபேக் - விமர்சித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த்!

By

Published : Jul 24, 2023, 5:56 PM IST

Updated : Jul 25, 2023, 7:22 PM IST

thumbnail

கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாணவர் அமைப்பு சார்பில் தமிழ்நாடு மாணவர் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் உடனான கலந்தாய்வு கூட்டம் இன்று (ஜூலை 24) நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் கலந்துகொண்டு மாணவர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.  

இக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், மாணவர் அமைப்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அண்ணாமலை மேற்கொள்ளவிருக்கும் நடைபயணம் (Annamalai yatra) போன்று மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றும் அதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு என்றும் கூறினார். ஆனால், அண்ணாமலை மேற்கொள்ள உள்ள யாத்திரை ஒரு ஃபேக் (Fake) யாத்திரை என்றும் அதனால் எந்தப் பயனும் இருக்காது என்றும் சாடினார். இந்திய வரலாற்றில் முதன்முறையாக பெரிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளதாகவும், இந்தக் கூட்டணி ஒத்த கருத்துடையக் கூட்டு இயக்கமாக செயல்படும்போது அது வரவேற்கக்கூடியதாக இருக்கும் என்றார்.

மேலும், 2024ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் என்பது பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையேயான தேர்தல் இல்லை என்றும் இது அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக நின்று பாஜகவை எதிர்ப்பதற்கான தேர்தல் என்றும் கூறினார். மேலும், மணிப்பூர் விவகாரம் (Manipur Violence) மக்களை இரண்டாகப் பிரித்து நடைபெறக்கூடிய வன்முறை, மாநில அரசாங்கங்களை அடக்கு முறையால் அடக்கிவிடலாம் என்று மத்திய அரசு வைத்துள்ள அனைத்து துறைகளையும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசாங்கங்களுக்கு எதிராக திருப்பும் முயற்சி நடைபெற்று வருவதாக'' அவர் குற்றம்சாட்டினார். இக்கூட்டத்தில் புறநகர் மாவட்ட தலைவர் விஎம்சி மனோகரன் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Last Updated : Jul 25, 2023, 7:22 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.