ETV Bharat / state

பாலியல் வன்புணர்வு வழக்கு - இளைஞருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!

author img

By

Published : Jan 23, 2020, 8:54 PM IST

விருதுநகர்: பாலியல் வன்புணர்வு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

போக்சோ
போக்சோ

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முருகன் காலனியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (30). இவர் கடந்த 30.8.2015 அன்று, அவரது பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதையறிந்த சிறுமிகளின் பெற்றோர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தைவேலை கைது செய்தனர்.

இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதி விசாரணை முடிவில் குழந்தைவேலு, இயற்கை மரணம் அடையும் வரை சிறை தண்டனை, 1 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் அபராதம் ஆகியவற்றை விதித்து நீதிபதி பரிமளா தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: திருவல்லிக்கேணியில் மின்கசிவால் வீட்டில் தீ விபத்து..!

Intro:விருதுநகர்
23-01-2020

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறைத்தண்டனை

Tn_vnr_05_pokso_judgement_vis_script_7204885Body:ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுமிகள் 2 பேரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிவகாசி இளைஞருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகாசி முருகன் காலனியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (30). பட்டாசு தொழிலாளியான இவர் திருமணமானவர். கடந்த 30.8.2015 அன்று அப்பகுதியைச் சேர்ந்த 2 சிறுமிகளை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையறிந்த சிறுமிகளின் பெற்றோர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைவேலை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற விசாரணையின் போது குழந்தைவேல் இயற்கை மரணம் அடையும் வரை அவருக்கு சிறை தண்டனை விதித்தும் ரூ.1.70 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி பரிமளா தீர்ப்பளித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.