ETV Bharat / entertainment

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட டைட்டில் அறிவிப்பு போஸ்டர் வெளியானது! - Vaa Vaathiyaar title poster

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 6:58 PM IST

Vaa Vaathiyaar: இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் படத்தின் தலைப்பு அறிவிப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது.

வா வாத்தியார் படத்தின் தலைப்பு அறிவிப்பு போஸ்டர்
வா வாத்தியார் படத்தின் தலைப்பு அறிவிப்பு போஸ்டர் (credits - Karthi X PAGE)

சென்னை: இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படம் வா வாத்தியார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதில் நடிகை கீர்த்தி ஷெட்டி, நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக, நடிகர் கார்த்தி நடிக்கும் மெய்யழகன் படத்தின் தலைப்பு அறிவிப்பு போஸ்டர் வெளியானது. அதனைத் தொடர்ந்து, கார்த்தியின் பிறந்தநாளான இன்று ’வா வாத்தியார்' படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. போலீஸ் உடையில் நடிகர் கார்த்தி நிற்க, அவருக்கு பின்னால் எம்ஜிஆர் வேடமிட்ட நபர்கள் இருப்பது போன்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதுவே படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நலன் குமாரசாமி சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவ்விரு படங்களும் காமெடி படமாக இருக்கும். அதேபோல், வா வாத்தியார் படமும் காமெடி படமாக அமையுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதில் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் ஜி.வில்லியம்ஸ், எடிட்டராக வெற்றி கிருஷ்ணன், கலை இயக்கத்தை கிரண், சண்டைக் காட்சிகள் அனல் அரசு உள்ளிட்ட தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி உள்ளனர். முன்னதாக, நடிகர் கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார்.

இதையும் படிங்க: கார்த்தி - அரவிந்த் சாமி காம்போவில் மெய்யழகன் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது! - MEIYAZHAGAN Movie Posters

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.