ETV Bharat / state

திருவல்லிக்கேணியில் மின்கசிவால் வீட்டில் தீ விபத்து..!

author img

By

Published : Jan 23, 2020, 7:13 PM IST

சென்னை: திருவல்லிக்கேணி அருகே வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணியில் மின்கசிவால் வீட்டில் தீ விபத்து திருவல்லிக்கேணி வீடு தீ விபத்து சென்னை வீடு தீ விபத்து மின்கசிவால் வீடு தீ விபத்து Triplicane House Fire Accident Triplicane House Electrical short circuit Fire Accident Triplicane House Electrical leakage Fire Accident Cheenai House Electrical leakage Fire Accident Cheenai House Fire Accident
Triplicane House Electrical short circuit Fire Accident

சென்னை திருவல்லிக்கேணி லால் பேகம் தெருவைச் சேர்ந்தவர் அஸ்வதத் அகமத்(72). இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் நான்கு மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இதில் சுமார் 3 குடும்பத்தினர் வாடகைக்கு வசித்துவருகின்றனர். இந்த வீட்டில் நான்காவது மாடியில் அஸ்வதத் அகமது குடும்பத்தினர் வசித்துவருகின்றார். இந்நிலையில், இன்று மதியம் 3.45 மணியளவில் மாடியில் உள்ள வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதனைக் கண்ட அஸ்மதத் அகமது, உடனே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்,எஸ்பிளனேடு உட்பட இடங்களில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சுமார் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

தீ பற்றி ஏறியும் வீடு

இந்த தீ விபத்தில், வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதே கட்டடத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

சாலையில் நின்ற லாரியில் திடீர் தீ!

Intro:


Body:house fire


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.