ETV Bharat / state

"நல்ல விஷயம் நடக்கும் போது இது தேவையா..?" சி.எம் என்னை திட்டுவார் என கலாய்த்த கே.என்.நேரு!

author img

By

Published : Jun 7, 2023, 4:00 PM IST

மாற்றுத்திறனாளிகளுக்காக ஸ்கூட்டர் வழங்கும் தமிழக அமைச்சர்கள்
மாற்றுத்திறனாளிகளுக்காக ஸ்கூட்டர் வழங்கும் தமிழக அமைச்சர்கள்

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ரூபாய் 50 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்திய வாகனங்களை 60 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதேப் போல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளுக்கும் ரூபாய் 47 லட்சத்து 19 ஆயிரம் செலவில் குப்பை அள்ளும் வாகனங்களையும் அமைச்சர்கள் வழங்கினார்கள். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்து உள்ள பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கம்மாள் என்பவர் பாம்பு கடித்து இறந்தார். அவரின் குடும்பத்தாருக்குத் தமிழக அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூபாய் ஒரு லட்சத்தை அமைச்சர்கள் வழங்கினர்.

மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மனுக்கள் வழங்க வரும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் ரூபாய் 4 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் வாகனத்தையும் அமைச்சர்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர். மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் திருச்சி மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவி சங்கத்திற்கு ரூபாய் 5 இலட்சத்து 25 ஆயிரம் வழங்கினர்.

மொத்தமாக ஒரு கோடியே 8‌‌ லட்சத்து‌ 33‌ ஆயிரம் மதிப்பு உள்ள நலத்திட்டங்களை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யப்பிரியா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜீத்குமார், மேயர் அன்பழகன், மண்டல தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளருக்குப் பேட்டி‌ அளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, "நாளை மறுநாள் தஞ்சை மாவட்டத்தில் டெல்டா பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து கூழையாறு, புள்ளம்பாடி பகுதியில் உள்ள நந்தியாறு ஆகியவற்றை பார்வையிட்டு பின்னர் திருச்சிக்கு வருகிறார். அதைத் தொடர்ந்து விமான மூலமாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்" என்றுக் கூறினார்.

பின்னர், ஆளுநர் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே என் நேரு "நல்ல விஷயம் நடந்து கொண்டிருக்கும் பொழுது இது தேவையா என முதல்வர் என்னை கூப்பிட்டு திட்டுவார்" என நகைச்சுவையாக பேசிவிட்டு கடந்து சென்றார்.

இதையும் படிங்க: கொஞ்சம் நியூஸ் பேப்பர் படிங்க.. பீகாரை திரும்பி பாருங்க சார்.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.