ETV Bharat / entertainment

கவினின் 'ஸ்டார்' சினிமா: ஒரு வார வசூல் எவ்வளவு தெரியுமா? - Star Movie

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 4:53 PM IST

Star movie: இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்து அண்மையில் வெளியாகி உள்ள 'ஸ்டார்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரிலீசான ஒரு வாரத்தில் கோடிகளில் வசூலை குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

Star Movie Poster
ஸ்டார் படத்தின் போஸ்டர் (Credits - Actor Kavin X Page)

சென்னை: 'பியார் பிரேமா காதல்' திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்டார்' திரைப்படத்தில் நடிகர் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என். வினோத் ராஜ்குமார் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ.ராகவ் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியாகி ஒரு வாரத்தில் உலகளவில் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இப்படத்தில் எட்டு நிமிடத்திற்கு மேல் நீடிக்கும் உச்சகட்ட காட்சி, சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட நீளமான (எட்டு நிமிடம் 21 வினாடி) கிளைமாக்ஸ் காட்சி இதுதான் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: "விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை" - ஸ்டார் நாயகி பிரீத்தி முகுந்தன்! - Star Film Heroine Preity Mukhudhan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.