ETV Bharat / state

சென்னை ஏஆர்டி நிதி நிறுவன மோசடி விவகாரம்; ஒரு வருடத்துக்குப் பிறகு சிக்கிய முகவர்கள்! - ard finance institute case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 6:40 PM IST

ARD finance institute fraud: சென்னை ஏ.ஆர்.டி நிதி நிறுவன மோசடி வழக்கில் 12 மாதம் தலைமறைவாக இருந்த இரண்டு முகவர்களை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.

கைதானவர்களின் புகைப்படம்
கைதானவர்களின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை முகப்பேர் பகுதியில் செயல்பட்டு வந்த ஏ.ஆர்.டி நகை நிறுவனம், முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி ஏ.ஆர்.டி ஜுவல்லரி, ஏ.ஆர்.டி நிதி நிறுவனம் உள்ளிட்ட வணிக வளாகங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுடைய முதலீடு பணத்தைக் கேட்டு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இந்த நிலையில், விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், இதற்கு மூளையாகச் செயல்பட்ட முக்கிய முகவர்களான ஆஷா மற்றும் தேவா ஆகிய இரண்டு பேரை 12 மாதத்துக்குப் பிறகு தற்போது கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். மேலும், இவர்களிடம் இருந்து சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜெயக்குமார் வழக்கில் களமிறங்கும் 'எக்ஸ்பர்ட்'... யார் இந்த சாகுல் ஹமீது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.