ETV Bharat / state

ஆரணி கூட்டுறவு வங்கியில் மோசடி: பணியாளர்கள் பணிநீக்கம்

author img

By

Published : Oct 28, 2021, 12:24 PM IST

bank
bank

சென்னை: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் மோசடியை தொடர்ந்து பொது கடன் மோசடியில் ஈடுபட்ட மூன்று அலுவலர்களை பணநீக்கம் செய்து கூட்டுறவு துறை தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பையடுத்து நகைக் கடன் மட்டுமின்றி பொது கடன்களை ஆய்வு செய்யவும் குழு அமைத்து கூட்டுறவு துறை பதிவாளர் உத்தரவிட்டு இருந்தார். இதில் முறைகேடு துணை போன அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆரணி கூட்டுறவு வங்கியில் ரூ.2.39 கோடிக்கு போலி நகைகள் வைத்து கடன் வழங்கியது கண்டுப்பிடிக்கப்பட்டது. 77 நபர்கள் முறைக்கேடான முறையில் நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சிலருக்கு எடை குறைவான நகைகளுக்கு அதிக தொகை கடனாக வழங்கியதும், ஓரே நபருக்கு பல லட்சம் கடனாக தரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆரணி கூட்டுறவு வங்கி சார்பதிவாளரை இட மாற்றம் செய்தும், நகை கடன் மோசடிக்கு உறுதுணையாக இருந்த 3 அலுவலர்களை பணிநீக்கம் செய்தும் அவர்கள் மீது காவல்நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதியவும் ஆணையிட்டு கூட்டுறவு துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: கூட்டுறவு வங்கி நகைக்கடன் மோசடி விவகாரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.