ETV Bharat / entertainment

'அரண்மனை 4', 'ஸ்டார்' படங்களுக்கு போட்டியாக இந்த வாரம் தியேட்டரில் ரிலீசாகும் திரைப்படங்கள்! - THIS WEEK RELEASE TAMIL MOVIES

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 1:56 PM IST

This week theatrical release movies: தமிழ் சினிமாவில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த செய்தி தொகுப்பை இங்கு காணலாம்.

theatre file photo
திரையரங்கம் கோப்புப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு இதுவரை குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் வெளியான 'அரண்மனை 4' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்று இந்தாண்டு தமிழ் சினிமாவின் முதல் வெற்றிப் படம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில் இந்த வாரம் 'எலெக்ஷன்', 'இங்க நான்தான் கிங்கு', 'படிக்காத பக்கங்கள்' உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

இங்க நான்தான் கிங்கு

இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில், நடிகர்கள் சந்தானம், தம்பி ராமையா, பால சரவணன், நடிகை ப்ரியா லயா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இங்க நான் தான் கிங்கு'. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டு இந்த வாரம் வெளியாகிறது. சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் புரொமோ காட்சி ஒன்றில் சந்தானம் ஆபாச வார்த்தை பேசியதாக எழுந்துள்ள சர்ச்சை குறிப்பிடத்தக்கது.

எலெக்ஷன்

சேத்து மான் படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில், உறியடி விஜயகுமார் நடித்துள்ள திரைப்படம் எலெக்ஷன். உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் இந்த வாரம் வெளியாகிறது. இது தேர்தல் காலம் என்பதால் சமீபகாலமாக தேர்தல் தொடர்பான படங்கள் அதிகமாக வெளியாகி வருகின்றன. கடந்த வாரம் வெளியான 'உயிர் தமிழுக்கு' படத்தை தொடர்ந்து இந்த வாரம் 'எலெக்ஷன்' திரைப்படம் ரசிகர்களை கவருமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இப்படத்தில் அயோத்தி புகழ் ப்ரீத்தி அஷ்ரானி நாயகியாக நடித்துள்ளார்.

படிக்காத பக்கங்கள்

இயக்குநர் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'படிக்காத பக்கங்கள்'. இந்தப் படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பௌர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் ப்ரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து பெண்கள் எவ்வாறு மீண்டு வர வேண்டும் என்பதை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படமும் இந்த வாரம் வெளியாகிறது.

கன்னி

கன்னிசன் லைஃப் கிரியேஷன்ஸ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கன்னி'. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், செபாஸ்டியன் சதீஷ் இசையமைத்துள்ளார். இப்படமும் இந்த வாரம் திரைக்கு லரவுள்ளது.

இதையும் படிங்க: கோலாகலமாக தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா! விழாவில் இடம் பெறும் இந்திய படங்கள் என்னென்ன? - Cannes Film Festival 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.