ETV Bharat / state

திருவண்ணாமலை ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன்!

author img

By

Published : Apr 28, 2023, 12:16 PM IST

திருவண்ணாமலை ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன்!
நியாய விலை கடை

திருவண்ணாமலையில் உள்ள நியாய விலை கடை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகளுக்கு ஐஎஸ்ஓ(ISO) தரச் சான்று தரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

திருவண்ணாமலை ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன்!

திருவண்ணாமலை: கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று திருவண்ணாமலையில் உள்ள நியாய விலை கடை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் முக்கிய துறைகளில் ஒன்றாக கூட்டுறவுத்துறை செயல்பட்டு வருகிறது. ஆகையால் கூட்டுறவுத் துறையில் வேளாண் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் வேளாண் கடனாக கடந்த ஆண்டு 13,442 கோடி வேளாண் கடன் 17.44 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து கால்நடைக்கடன், நகைக்கடன் உட்பட 17 வகையான கடன்கள் அளிக்கப்படுகிறது. மேலும் விளிம்பு நிலையில் உள்ளவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் கூட்டுறவு மூலமாக தான் நாட்டு உயர்வுக்கு வாய்ப்பு உள்ளது. எளிதில் கடன்கள் கிடைக்கக்கூடிய ஒரு துறையாகவும் கூட்டுறவுத்துறை இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நியாய விலை கடை என்பது பெயரிலேயே நியாயம் என்பது உள்ளது. ஆகையால் பொதுமக்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரே நேரில் சென்று பார்க்கிறார். பொதுமக்கள் பொருட்கள் வாங்கி சென்றுவிடுவார்கள் என இல்லாமல் ஒரு நட்புடன் இணக்கமான உறவுடன், கட்டாயப்படுத்தாமல் கொடுக்க வேண்டும். மேலும் வேகமாக செல்லக்கூடுய நுகர்வோர் பொருட்களை பார்த்து வாங்கப்படும்.

மக்களுக்கு தேவையான பொருட்கள் எப்பொழுதும் இருப்பு இருக்க வேண்டும் என்றார். இந்த ஆண்டு கூட்டுறவுத் துறையில் வேளாண்மைக்காக 500 கோடி வரை 2000 ஆரம்ப வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல்வேறு மிஷனரிகள் வாங்குவதற்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. கடன் கொடுத்து, கடன் வாங்கும் துறையாக கூட்டுறவுத்துறை இல்லாமல் தொழிலுக்காக கடன் கொடுக்கும் ஒரு துறையாகவும் சிறந்து விளங்குகிறது என்றார்.

மேலும், "தற்போது வரை தமிழ்நாட்டில் மொத்தம் 35,941 கடைகள் உள்ளது. அதில் 26,018 ரெகுலர் கடைகளும், 9,923 பகுதி நேர கடைகளும் உள்ளது. அதில் 5,884 கூட்டுறவு நியாய விலை கடைக்கு ஐஎஸ்ஓ (ISO) தரச் சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த ஆண்டு 3,876 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 35.29 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 4.36 லட்சம் விவசாயிகளுக்கு 7191.54 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்தே தெரியும் வேளாண் துறைக்கு எவ்வளவு முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

எங்களுக்கு ஒரு கண் கூட்டுறவு, இன்னொரு கண் உணவு, மூன்றாவதாத நுகர்வோர் பாதுகாப்பு என்றார். தற்போது தேசிய அளவில் கோதுமை தட்டுப்பாடு உள்ளது. ஆகையால் கோதுமை, மண்ணெண்ணெய் போன்றவற்றை விரும்பியவர்களுக்கு தருவது உணவுத்துறையின் கடமை ஆகும். மேலும் நியாயமான கருத்துகளை வலியுறுத்துவது எங்களின் கடமை அதை கட்டாயமாக மேற்கொள்வோம்" என ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதையும் படிங்க: CSK vs RR: ராஜஸ்தானிடம் திணறும் சென்னை அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.