ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரின் 37வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனால் பேட்டிங்கில் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக யாஷவி ஜாய்ஸ்வால் அரை சதம் கடந்து 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதேபோல், ராஜஸ்தான் அணியின் துருவ் ஜூரல் 34 மற்றும் ஜோஸ் பட்லர் 27 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதேநேரம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துஷர் தேஷ் பாண்டே 2 விக்கெட்டுகளையும், தீக்சனா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 203 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மேலும், அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வீரர்கள் ஆட்டம் இழந்தனர். இதனால் இது வரையிலான ஆட்டத்தின் 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புடன் 129 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடி வருகிறது.
ராஜஸ்தான் அணி: ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஹெட்மேயர், ஜூரேல், அஸ்வின், ஹோல்டர், சந்தீப் சர்மா, சாஹல், ஆடம் ஸம்பா.
சென்னை அணி: கெய்க்வாட், கான்வே, ரகானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா.