ETV Bharat / state

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு - 12 பேர் கைது

author img

By

Published : May 19, 2022, 12:17 PM IST

மீஞ்சூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டி கொலை
மீஞ்சூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டி கொலை

மீஞ்சூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சிமன்ற தலைவர் மனோகரன் தமது குடும்பத்தினருடன் கடந்த 15ஆம் தேதி இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். அப்போது எதிரே வந்த லாரி. காரின் மீது மோதி காருக்குள் வைத்து மனோகரனை மனைவி, குழந்தைகள் கண் முன்னே சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இரண்டு உதவி ஆணையர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். கொலை சம்பவம் அரங்கேறிய இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணையை முடுக்கி விட்டனர். இந்த கொலையை அரங்கேற்றிய முக்கிய குற்றவாளியான சுந்தர் என்பவரை கைது செய்து மீஞ்சூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

மீஞ்சூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டி கொலை

விசாரணையில் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளை ஏற்றிச் செல்ல ஒப்பந்தம் எடுத்த ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், லாரி உரிமையாளரான சுந்தரபாண்டியனுக்கு லோடு வழங்காததால் ஏற்பட்ட பகையே கொலைக்கு முக்கிய காரணம் என தெரிய வந்தது.

மேற்கொண்டு அளித்த தகவலின் பேரில் இந்த கொலையில் தொடர்புடைய சுந்தர் (எ) சுந்தரபாண்டியன் மற்றும் அவருக்கு உதவிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கொலை வழக்கில் 12 பேரையும் காவல்துறையினர் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஐயப்பன் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து 12 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்தின் துரோகத்தை முதலமைச்சர் முறியடிக்க வேண்டும் - காட்டுப்பள்ளி மீனவர்கள் குமுறல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.