ETV Bharat / entertainment

நடிகர் சிம்புவுடன் என்ன பிரச்சனை? உண்மை உடைத்த ஐசரி கணேஷ்! - Isari ganesh Vs Simbu

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 7:02 AM IST

Isari ganesh Vs Simbu: சிம்பு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை, எங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுத்துவிட்டு வேறு படங்களுக்கு செல்ல வேண்டும் என கூறியிருக்கிறோம் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்

Isari ganesh, hip hop aadhi photo
ஐசரி கணேஷ், ஹிப் ஹாப் ஆதி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள 'பிடி சார்' என்ற திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று(மே.16) சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேசன், "சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம்.

புகார் மீதான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதற்கான தீர்வு கிடைக்கும் என்றார். சிம்பு நடிப்பதற்கு தடை என தகவல் வந்ததே என்ற கேள்விக்கு, சிம்பு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. எங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுத்துவிட்டு வேறு படங்களுக்கு செல்ல வேண்டும் என கூறியிருக்கிறோம். அவரும் விரைவில் படம் நடித்துக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இந்த பிரச்சனைக்கு பிறகு வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் வருவதற்கும் வாய்ப்புள்ளது. ரஜினிகாந்தை சந்தித்தது தொடர்பான கேள்விக்கு, ரஜினிகாந்தை சந்தித்தது உண்மைதான், விரைவில் அவருடன் இணைந்து படம் பண்ணுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.

நடிகர்கள் மீதான குற்றச்சாட்டை வெளிப்படையாக தெரிவிக்காததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, அனைவரையும் அப்படி சொல்லிவிட முடியாது அநேக நடிகர்கள் சரியான முறையில் நடித்துக் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஹிப்ஹாப் ஆதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் முழு ஒத்துழைப்பை வழங்குகின்றனர். அவர்களோடு மீண்டும் மீண்டும் படங்களை செய்து வருகிறோம், ஒரு சில நடிகர்கள் செய்வது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தாது என்றார்.

இதையும் படிங்க: “என்னைப் பற்றி பிறர் பேசுவதில் நான் கவனம் செலுத்துவதில்லை” - இளையராஜா! - Ilayaraja Vs Vairamuthu

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.