ETV Bharat / state

Tenkasi Murder CCTV: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

author img

By

Published : Jun 14, 2023, 4:19 PM IST

Etv Bharat
Etv Bharat

நகராட்சி அலுவலகத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பட்டப்பகலில் நகராட்சி அலுவலகத்தில் இளைஞர் வெட்டிக் கொலை

தென்காசி: விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் நகராட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அப்போது நகராட்சி அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் ஒன்று அலுவலக வாயில் முன்பு வைத்து ராஜேஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உயிரிழந்த ராஜேஷின் உடலை மீட்டு போலீசார் தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் ராஜேஷின் உறவினர்கள் தற்போது திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நீ மட்டும்தான் வீடியோ காட்டுவியா? - ஆபாச வீடியோவால் இளைஞரை கொலை.. தென்காசி எலும்புக்கூடு வழக்கில் பகீர் தகவல்!

இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சாலை மறியலில் ஈடுபட்டு வரும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பட்டப்பகலில் நகராட்சி அலுவலகத்தில் வைத்து ஒரு நபர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜேஷை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

இதையும் படிங்க: பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கல்லூரி தாளாளர் தலைமறைவு.. தென்காசியில் கொடூரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.