ETV Bharat / state

பாபர் மசூதி இடிப்பு தினம் - மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

author img

By

Published : Dec 6, 2019, 8:34 AM IST

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம், போலீஸ் பலத்த சோதனை
babri masjid demolition anniversary

சேலம்: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சேலம், மதுரை, தருமபுரி, கடலூர் உள்ளிட்ட நகரங்களில் ரயில் நிலையங்கள், கோயில்கள் என முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு நாடெங்கும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனையொட்டி சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் அனைத்து மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து செல்லுமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து சேலம் ஜங்சன் பகுதியிலும், ரயில் நிலையத்திலும் நேற்று மாலை காவல்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலீஸ் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் போன்ற கருவிகளை பயன்படுத்தி வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

சேலத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகளிடம் காவல்துறையினர் பைகள் மற்றும் பெட்டிகளைத் திறந்து சோதனையிட்டனர். மேலும் சேலம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

ரயில், பேருந்து நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்

இதே போன்று மதுரை ரயில் நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒவ்வொரு பயணிகளும் கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் மதுரை ரயில்வே காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில் தண்டவாளங்களிலும், ரயில் பாதைகளிலும் ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் 900 காவல்துறையினர் அம்மாவட்ட எல்லைகளான தொப்பூர், காரிமங்கலம், திப்பம்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைசாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

babri masjid demolition anniversary
தருமபுரி பேருந்துநிலையம் அருகேயுள்ள பழக்கடையில் சோதனை செய்த காவல்துறையினர்

இது தவிர கடலூர் முதுநகர் ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் போலீசார் பொது மக்களின் உடைமைகளை மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை செய்தனர்.

Intro:சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை.

டிசம்பர் 6யை முன்னிட்டு சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து அதிரடி சோதனை.


Body:டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு நாடெங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனையொட்டி சேலத்தில் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து வர உத்தரவிட்டார்.

இதனையடுத்து சேலம் ஜங்சன் பகுதியில் சூரமங்கலம் உதவி கமிஷனர் செல்வராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் செந்தில் தலைமையிலும், ஜங்ஷன் ரயில்வே காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் DSP பாபு மற்றும் காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையிலும் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வியாழன் மாலை அதிரடி சோதனை நடந்தது.

போலீஸ் மோப்ப நாயும் அழைத்து வந்து மோப்பம் பிடிக்க விடப்பட்டது. இதுதவிர மெட்டல் டிடெக்டர் சோதனையும் செய்யப்பட்டது. சேலத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று ரயில்களில் காவல்துறையினர் ஏறி பைகள் மற்றும் பெட்டிகளைத் திறந்து சோதனையிட்டனர். இதுபோல சேலம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் நின்று கண்காணிக்கவும் செய்தனர்.

சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வியாழன் மாலை முதல் கண்காணித்து வருகிறார்கள்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.