ETV Bharat / state

“காவிரி விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது” - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 8:22 AM IST

“காவிரி விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது” - புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
“காவிரி விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது” - புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

Cauvery issue: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யாமல் வேறு கட்சி இருந்திருந்தால், காவிரி நீர் விவகாரத்தில் திமுகவின் போக்கு இப்படித்தான் இருந்திருக்குமோ என புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

“காவிரி விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது” - புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

திண்டுக்கல்: தமிழகத்திற்கு கர்நாடக அரசு காவிரி தண்ணீரைத் தர முடியாது என்பதை கண்டித்தும், அரசியல் லாபம் பார்க்காமல் தமிழகத்தின் நலன் கருதி காவிரி நதிநீர் பங்கீட்டில் திமுக அரசு செயல்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திண்டுகல்லில் நேற்று (அக் 6) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .

இது குறித்து அவர் பேசுகையில், “காவிரி நதிநீர் ஆணையத்தின்ப,டி ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை வந்து சேர வேண்டிய பங்கீட்டு நீர் முறையாக வந்து சேரவில்லை. கர்நாடகாவில் தோழமைக் கட்சியாக காங்கிரஸ் இருப்பதால், தமிழக அரசு போதிய அளவில் அழுத்தம் கொடுக்கவில்லை.

பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி நீர் இல்லாமல் பெருகிவிட்டது. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, நதிநீரை சரியாக பங்கிட்டு வழங்க வேண்டும். இதனைக் கண்டித்து வருகிற 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி போராட்டத்தில் ஈடுபட உள்ளது.

அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பதுபோல், ஆளுங்கட்சியான திமுகவும் நதிநீர் பங்கீட்டுக்காக போராட வேண்டும். கர்நாடக முதல்வர் மற்றும் நீர் பாசனத் துறை அமைச்சரைச் சந்தித்து நீர் பங்கிட்டினை முறைப்படுத்த வேண்டும். பூனைக்குட்டியை கவ்வுவது போல் மென்மையாக அழுத்தம் கொடுக்கிறது, திமுக அரசு. கடுமையாக மோதாமல் கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவோம் என மென்மையாக நடந்து கொள்கிறார்கள்.

இதில் திமுகவும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுகிறது. கர்நாடகவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யாமல் வேறு கட்சி இருந்திருந்தால், திமுகவும் போக்கு இப்படித்தான் இருந்திருக்குமோ? டெல்டா பாசன நெற்கதிரை நம்பி எட்டு கோடி தமிழக மக்கள் இருக்கின்றனர். அரசியல் லாபம் பார்க்காமல் தமிழகத்தின் நலன் கருதி திமுக அரசு செயல்பட வேண்டும்” என்றார்.

மேலும், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை பற்றி பேசிய அவர், “திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி 311-இன் படி இடைநிலை ஆசிரியருக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என வாக்குறுதி அளித்து, இதுவரை வழங்கப்படவில்லை. அவர்கள் கமிட்டி போட்டு தீர்மானிப்போம் என்று வாக்குறுதியில் கூறவில்லை. வாக்குறுதியில் கூறியது போல வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

அதேபோல் ஆசிரியர்களின் தலைவர்கள், பொறுப்பாளர்களிடம் முதல்வர் கலந்தாய்வு செய்து, அதற்கு தீர்வு காண வேண்டும். அதேபோல், தமிழக அரசின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பகுதி நேர ஆசிரியர்கள் என்பதை நீக்கிவிட்டு, முழு நேர ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்ய வேண்டும். தற்பொழுது 10 ஆண்டுகள் 5 ஆண்டுகள் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களை, தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக நியமனம் செய்ய வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை கோரிய வழக்கு; நவ.7-க்கு தள்ளி வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.