ETV Bharat / state

“அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது” - அண்ணாமலை பதில்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 5:02 PM IST

Etv Bharat
Etv Bharat

Annamalai K: அண்ணா குறித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது எனவும், அண்ணா பற்றி சரித்திரத்தில் உள்ளதை பேசுகிறேன் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது

கோயம்புத்தூர்: சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியது, ”மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கடந்த காலங்களில் இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நீண்ட காலத்திற்கு பிறகு நிறைவேறியுள்ளது.

சென்செக்ஸ் முடிந்ததும், அடுத்து வரும் தேர்தலில் இந்த இட ஒதுக்கீடு அமலில் வரும். பாஜக, தனது கட்சிக்குள் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கி வருகிறது. இதனை பெண்கள் உரிமையாக பாஜக பார்ப்பதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். வெகு விரைவில் 33 சதவீதத்திற்கு மேல் பெண்கள் சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள். இதனை ஏக மனதாக அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளனர்.

எனக்கு தனிப்பட்ட முறையில் அதிமுகவினருடன் பிரச்னை இல்லை. பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்கள் உடன் அண்ணாமலைக்கு பிரச்னை இருக்கலாம். இந்த கூட்டணியின் மையப்புள்ளியான மோடியை, பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்கள் கூட்டணியில் உள்ளனர்.

செல்லூர் ராஜூ சொல்வதுபோல் மத்தியில் மோடி, மாநிலத்தில் எடப்பாடி என நான் எப்படி அறிவிக்க முடியும்? என்னை விமர்சித்தால் ஏற்றுக் கொள்வேன். ஆனால் தன்மானத்தை கேள்விக் குறியாக்கும் கருத்துக்களுக்கு பதில் பேசுவேன். நான் தன்மானத்தை விட்டுத் தந்து அரசியல் செய்ய மாட்டேன்.

எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் வேறு வேறு சித்தாந்தம் கொண்ட கட்சிகள். தமிழ்நாட்டில் மது ஒழிப்பதற்கு இலக்கணம், அண்ணா. குடும்ப அரசியலை எதிர்த்தவர், அண்ணா. அண்ணாவின் குடும்பத்தைப் பற்றி பேசவில்லை. அவரைப் பற்றி தரக்குறைவாக விமர்சிக்கவில்லை.

எந்த கட்சிக்கும், எங்களுக்கும் போட்டியில்லை. பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே எங்களது இலக்கு. என் கட்சியை நான் வளர்க்கிறேன். திமுக விஷம், திமுகவை அடியோடு வெறுக்கிறேன். நான் ஆக்ரோஷமான அரசியல் செய்கிறேன். அதனால் பேச்சிற்கு பேச்சு நான் பேச விரும்பவில்லை.

கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை, ”1956ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவு கருத்தை பேசிய அண்ணாவை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கண்டனம் தெரிவித்து, அண்ணா மன்னிப்பு கேட்காவிட்டால் மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என எச்சரித்ததால் உடனே பயந்து அண்ணா மன்னிப்பு கேட்டார்” என அண்ணாமலை பேசினார்.

அண்ணாமலை இவ்வாறு பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறுவதாகவும், அண்ணாவை பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஜெயக்குமார் கூறினார். இந்த விவகாரம் குறித்து பதிலளித்த அண்ணாமலை, “நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. அண்ணா பற்றி சரித்திரத்தில் உள்ளதை பேசுகிறேன்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார். சனாதனம் எங்கள் உயிர் நாடி. சனாதனம் வாழ்க்கை கோட்பாடு. சனாதன தர்மம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மோடியை ஏற்றால் கூட்டணி இருக்கும். இந்தியா கூட்டணியில் 5 மாநிலங்களில் கூட்டணி இல்லை. அக்கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் எனத் தெரியாது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்... விவசாயிகள் அச்சம்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.